பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

21

பிறகு காலஞ்சென்றதும், உடனேஅவருடைய நூல்நிலையத்திலிருந்த புத்தகங்களை எல்லாம் மறைந்து போனதும் இன்னொன்று. இவை எல்லாம் என்னுடைய இளமை வயதில் ஏற்பட்ட அனுபவங்கள்.

என்னுடைய அறுபதாவது ஆண்டில், இந்த நூலை எழுத வேண்டும் என்னும் எண்ணம் தோன்றியது. இதற்குக் காரணம் மேலே கூறியஎன்னுடைய இளமைக் காலத்தில் ஏற்பட்டிருந்த பழம் புத்தகங்களின் தொடர்புதான். என்னுடைய சிறு அநுபவத்தைக் கொண்டு ‘பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்' என்னும் இந்நூலை எழுதி வெளியிடுகிறேன். கி.பி. 1800- முதல் 1900 வரையில் உள்ள ஒரு நூற்றாண்டு வரலாறு இதில் கூறப்படுகிறது. இது ஒரு மேற்போக்கான வரலாறு.

இந்நூல் எழுதுவதற்குப் பல நூற்றூக்கணக்கான புத்தகங்கள் எனக்குத்துணையாக இருந்தன. புத்தகம் எழுதுவதற்குத் துணையாக இருந்த நூல்களின் பட்டியலைத் தருவது என்னுடைய வழக்கம். ஆனால், இந்நூலுக்கு அவ்வித பட்டியலைத் தரவில்லை. காரணம் அப்பட்டியல் மிகப் பெரிதாகிவிடும் என்பதே.

மறதிகாரணமாகவும் அறியாமை காரணமாகவும்சில செய்திகள் இந்நூலில் விடுபட்டிருக்கக் கூடும். அறிஞர்கள் அவற்றைப் பொறுத்தருள வேண்டுகிறேன். தெரிந்துள்ள விஷயங்களும் மறந்து போகலாகாது என்னும் கருத்துதான் இந்நூலை எழுதுவதற்கு முக்கிய காரணமாகும்.

என்னுடைய வேண்டுகோளுக்கிணங்கி, செந்தமிழ்க் காவலர், சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் தமிழ்ச் சொற்களஞ்சியத் தலைமை ஆசிரியர், டாக்டர் அ.சிதம்பரநாதன், எம்.ஏ., எம்.எல்.சி. அவர்கள் இந்நூலுக்கு முன்னுரை வழங்கியது பற்றி அவருக்கு என்னுடைய நன்றியுரித்தாகும்.

இந்நூலினை அச்சிடும்போது அச்சுப் பிழைகளைத் திருத்தி உதவி புரிந்த நண்பர், குழந்தைக் கவிஞர், புலவர் தணிகை உலகநாதன் அவர்களுக்கும் என்னுடைய நன்றி உரியது.

இந்நூலை அழகாக அச்சிட்டு வெளிப்படுத்திய சென்னை சாந்தி நூலகத்தாருக்கு நன்றி செலுத்துகிறேன்.

சென்னை – 4.

23-5-62.

சீனி.வேங்கடசாமி.