பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

66

"பொன்மலருங் கொன்றைப் புனிதமுடி யைங்கரன்மேல் சொன்மலருஞ் செந்தமிழிற் றூயபதி கம்புகன்று தென்மலருஞ் சாவித் திரிசரிதை செய்தோனே கன்மவசந் தானோ கடிதிற் பிரிந்தனையே! கஞ்சமலர்க் கண்ணா கடிதிற் பிரிந்தனையே!!"

"பேணிமுகில் போல்வார்சொல் பெற்றுவக்கும் சாதகமே யாணர்நூல் நாண்மலரின் இன்தேன் உணுஞ்சுரும்பே மாணெழில்சேர்ந் தோங்கு மதியே இயற்றமிழின் மாணவர்தங் கண்ணே மறந்தெங்ஙன் ஏகினையோ! மாமுளரிக் கண்ணா மறந்தெங்ஙன் ஏகினையோ!!”

அப்துல் காதிறு ராவுத்தர் (1877-?)

இளையான்குடிக்கு அருகில் உள்ள சோதுகுடி என்னும் ஊரில் பிறந்தவர். குலாம் காதிறு நாவலரிடம் தமிழ் பயின்றார். ஆங்கிலமும் கற்றவர். மதுரைத் தமிழ்ச்சங்கப் புலவராக இருந்தார். செய்யுள் இயற்ற வல்லவர். இவர் இயற்றிய நூல்கள்: மகுமூது பஞ்சரத்தினம், நாமகள் நவமணிமாலை, சோதுகுடிச் சிங்காரவழி நடைச்சிந்து, கட்டோம்பு அத்திவா வழிநடைச்சிந்து நாகூர் நாயகர் கீர்த்தனாரத்தினம்.

மு. ரா. கந்தசாமிக் கவிராயர் (?-1918)

முகவூர் இராமசாமிக் கவிராயரின் மூன்றாவது மைந்தர் இவர். தம் தந்தையாரிடத்திலும் திருவாவடுதுறை ஆதீனத்து நமச்சிவாயத் தம்பிரானிடத்திலும் கல்வி பயின்றார். உடுமலைப்பேட்டையில் போர்டு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்தார். பிறகு, மதுரையில் ‘விவேகபாநு' அச்சுக்கூடத்தையும் 'விவேகபாநு' பத்திரிகையையும் நடத்தினார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் நண்பர். இவர் இயற்றிய நூல்கள்: அரிமழத் தலபுராணம், கருமலையாண்டவர் துதி மஞ்சரி, குமண சரித்திரம், திருப்போரூர்த் திரிபந்தாதி, தனிச் செய்யுட் சிந்தாமணி, பலாநிவேத நாயகியம்மை பிள்ளைத்தமிழ், வியாசத்திரட்டு (இரண்டு பாகம்) கம்பராமாயணம் ஆரணியகாண்ட

உரை.