பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

பக்தர்களின் சரிதங்களைத் தமிழில் செய்யுளாக இயற்றி ஸ்ரீபக்தலீ லாமிர்தம் என்னும் பெயருடன் வெளியிட்டார். புண்டலீகர், ஜயதேவர், துளசி தாசர், நாமதேவர், கபீர்தாசர் முதலாக சக்குபாயி, குபாகும்பார், கமலாகரர், துக்காராம் இறுதியாக எண்பத்திரண்டு பக்தர்களின் சரிதங்கள் இதில் கூறப்படுகின்றன. 5397 செய்யுட்களைக் கொண்ட நூல்.

இந் நூல், 1888-ஆம் ஆண்டு, இந் நூலாசிரியரின் தம்பியாகிய மாதுசாமி சூரியவம்சி அவர்களால் தமது தஞ்சை ‘திவாகர முத்தி ராட்சரசாலையில்' பதிப்பிக்கப்பட்டது. திரிசிரபுரம் தமிழ்த் தலைமைப் புலவராகிய மாகவித்துவான், வீ. கோவிந்த பிள்ளை அவர்களால் பார்வையிடப்பட்டு, தஞ்சை மாநகர் தமிழ்த் தலைமைப் புலவராகிய மதுரை முத்து உபாத்தியாயர் அவர்களால் ஒருவாறு பார்வை

யிடப்பட்டு’ அச்சிடப்பட்டது.

(இந் நூலுக்குச் சாற்றுகவி கொடுத்தோர்: இயற்றமிழாசிரி யராகிய திரிசிரபுரம் மகாவித்துவான் வீ. கோவிந்த பிள்ளை அவர்கள், தஞ்சை மாநகரத்துத் தலைமைப் புலவராகிய மகாவித்துவான் மதுரை முத்து உபாத்தியாயர் அவர்கள், தஞ்சை மாநகரம் சதாவதானம் சுப்பிரமணிய ஐயரவர்கள், தஞ் தஞ்சை மகாராஜா அவர்கள். மந்திரியாகிய பெரியண்ணாவென்னும் வேங்கடதாசர், வல்லம் மகாவித்துவான் சரவண உபாத்தியாயர் அவர்கள். தஞ்சை மாநகரம் மகாவித்துவான் மதுரை முத்து உபாத்தியாயர் சீடர்களான கோவிந்தசாமிபிள்ளை முன்ஷி கோதண்டராம பிள்ளை, தஞ்சாவூர் எஸ். பி. ஜி பாடசாலைத் தமிழாசிரியர் இராமையா வஸ்தாது, இரோஜிராவ் மகாவித்துவான் கோவிந்தசாமி பிள்ளை அவர்கள் குமாரர் மகாவித்துவான் முன்ஷி நாராயணசாமி பிள்ளை, முத்தாம்பாள்புரம் சத்திரம் மகாவித்துவான் வீராசாமி உபாத்தியாயர், நாத்தூர் சுப்பு மூவரயர் புத்திரர் நல்லமுத்து என்கிற ராமநுஜதாசர் ஆகிய இவர்கள்.)

கந்தசாமிப் பிள்ளை (ச.மு.)

தென் ஆர்க்காடு மாவட்டம் காரணப்பட்டு கிராமத்தில் பிறந்தவர். வடலூர் இராமலிங்க சுவாமியுடன் நெருங்கிப் பழகியவர். இவர் இயற்றிய : வள்ளலார் வரலாறு, சுந்தர வினாயகர் மாலை, சாமிமலை கோடச வெண்பா, சாமிமலை வெண்பா, குருநேச வெண்பா, கொலை மறுத்தல், அருட்பிரகாசர் அற்புத அந்தாதி, நன்னிமித்தம்