பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

ஞானப்பிரகாசம் பிள்ளை

229

இவர், மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் தம்பியார், மாயூரம் முன்சீபு கோர்ட்டிலும், தரங்கம்பாடி முன்சீபு கோர்ட்டிலும் எழுத்தாளராக அலுவல் செய்தார். கிறிஸ்து சமயத்தவர். மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் மாணவர். அவரிடத்தில் மிகுந்த அன்புள்ளவர். மகாவித்துவான் பிள்ளைய வர்கள் இவருக்குச் செய்யுளாக ஒரு கடிதம் எழுதி, ஒரு சாய்வு நாற்காலியை அனுப்பும்படிக் கேட்டுக்கொண்டிருந்தார், அந்தக் கடிதம் இது.

66

'உறுவலியின் இடங்கொண்டு வனப்பமைந்த நாற்காலி ஒன்று வேண்டும்;

மறுவறுநாற் காலியெனல் யானையன்று குதிரையன்று வல்லேறன்று கறுவகல்பாற் பசுவன்றால் இவையெலாம் இயங்குதல்செய் கடன்மேற்கொள்ளும் பெறுபவர்பால் இயங்காது வைத்தவிடத் தேயிருக்கப் பெற்றதாமே.

அத்தகைய தொன்றனுப்பின் அதினமர்ந்து மிக்கசுகம் அடைவேன்யானும்

உத்தமநற் குணத்தினுயர் நீயுமிகு சீர்த்தியனாய் ஒளிராநிற்பை

வித்தமற் றஃதெவ்வா றிருப்பதற்கும் இடங்கொடுத்தல் வேண்டுமேய

சுத்தமிகும் அதனைவரு பவன்பாலே

யனுப்பிடுதல் தூயதாமே!”

பிள்ளையவர்கள் இக்கடிதத்தில் விரும்பியபடியே ஞானப் பிரகாசம் பிள்ளை ஒரு சாய்வு நாற்காலியை அனுப்பி வைத்தார்.

வேதநாயகம் பிள்ளையவர்கள் இயற்றிய நீதிநூல் என்னும் செய்யுள் நூலுக்கு ஞானப்பிரகாசம் பிள்ளை 1885-ஆம் ஆண்டில் உரை எழுதினார். வேதநாயகம் பிள்ளை விருப்பப்படியே இவ்வுரை யை எழுதினார். ஆனால், நூலாசிரியர் உயிரோடிருக்கும்போது