பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

233

நான்மணிமாலை, முதலாழ்வார் மும்மணிக் கோவை, அத்திகிரி யந்தாதி, சேடகிரி யந்தாதி, கோதைநாயகியார் மாலை, வேதவல்லித் தாயார் மாலை, உருப்பிணித் தாயார் மாலை, அணிமா மலர் மங்கைத் தாயார் மாலை, என்னைப் பெற்ற தாயார் மாலை, கனகவல்லித் தாயார் மாலை, பெருந்தேவித் தாயார் மாலை, அலர்மேல் மங்கைத் தாயார் மாலை, அரங்கநகரன்னை யடைக்கல மாலை, பார்த்தசாரதிப் பரஞ்சுடர் மாலை, பார்த்தசாரதி மாயவன்மாலை, பார்த்தசாரதிப் பெருமான்மாலை, வீரராகவப் பெருமாள் மாலை அரங்க நகரப்பனடிப் புகழ்ச்சி மாலை. இவை ஒவ்வொன்றும் 102 செய்யுட்களை யுடையன.

தொண்டைநாட்டு 22 வைணவத் திருப்பதிகளின் மேலும் பஞ்சரத்தினங்கள் இயற்றியிருக்கிறார். இவருடைய நூல்கள்: “பிரபந்த வித்வான் கொ. பள்ளி கொண்டான் பிள்ளையவர்கள் இயற்றிய பிரபந்தத் திரட்டு” என்னும் பெயரால் 1899-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், திருமணம் செல்வ கேசவராய முதலியார் அவர்களால், சென்னப்பட்டினம் செங்கல்வராய நாயகர் ஆர்பனேஜ் அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டன.

இந்தப் பதிப்பில் கீழ்க்கண்டவர்கள் சாற்று கவிபாடியுள்ளனர். பிரபந்த வித்துவான் காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு, பெங்களூர் சென்ட்ரல் காலேஜ் தமிழ்த் தலைமைப் பண்டிதர் தி. கோ. நாராயண சாமி பிள்ளை, தி. செல்வகேசவராய முதலியார் M.A. புவனகிரி பிரபந்த வித்வான் அழகிய மணவாளதாசர், கோயம் புத்தூரைச் சேர்ந்த பூளைமேடு வித்துவான் வேணு கோபாலசாமி நாயுடு.

பள்ளிகொண்டான் பிள்ளையவர்கள் தம் இயற் தமிழாசிரியர் புரசை அஷ்டாவதானம் சபாபதிமுதலியார் மீது பாடிய துதிகவி:

புரசைப்பதிவள ரட்டாவதானப் புலவர்கணத்

தரசைத் தமிழ்க் கல்வி வேட்டோர் நிளைக்கு மனக் கரினீள் சரசைச் சபாபதிமாலை யெப்போதினுந் தாழ்த்து தொழுந் சிரசைக் கரத்தைப் படைத்தே னிதுவுமென் செய்தவமே

பவர் ஐயர்.13

எஸ். பி. ஜி. மிஷனைச் சேர்ந்தவர். திருநெல்வேலியில் வேதியர் புரத்தில் இருந்தவர். சாஸ்திரம் ஐயர் என்னும் சைன வித்துவானிடம் கல்வி பயின்றவர். புலவர்களால் நன்கு மதிக்கப்பட்டவர். கிறிஸ்து மத