பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

சம்பந்தமான சில தமிழ் நூல்களை எழுதியிருக்கிறார். மிஷனரி சங்கங்கள் ஒன்று சேர்ந்து தமிழ் விவிலிய நூலைச் சுத்த பதிப்பாக வெளியிட முயன்றபோது. அந்தப் பொறுப்பைப் பவர் ஐயரிடத்தில் ஒப்படைத்தனர். பிறகு, பழைய ஏற்பாட்டையும் திருத்தி வெளியிட்டார்.

இவர் இயற்றிய நூல்கள். வேத அகராதி 1841, நியாயப் பிரமாண விளக்கம் 1847, விசுவாசப் பிரமாண விளக்கம், இந்து மதத்துக்கும் பாப்பு மதத்துக்கும் இருக்கிற சம்பந்த விளக்கம் 1851, தர்ம சாஸ்திர சாரம் 1857. சிந்தாமணி, நாமகளிலம்பகத்தை நச்சினார்க் கினியர் உரையுடனும் ஆங்கில விளக்கத்துடனும் அச்சிட்டார். இப்பதிப்புக்கு இவருடன் உதவியாக இருந்தவர் முத்தையாப்பிள்ளை என்பவர். இந்தப் புத்தகம் 1868-ஆம் ஆண்டு சென்னையில் அச்சிடப்பட்டது. சென்னை மாகாணக் கல்லூரியில் பி.ஏ. வகுப்புக்குப் பாடமாக வைக்கப்பட்டது. சாதி வித்தியாச விளக்கம் 1857. கிறிஸ்து மார்க்கம் இந்து தேசத்தில் விருத்தியான சரித்திரம் 1879, பிரசங்க ரத்தினாவளி 1875, பதமஞ்சரி (ஆங்கிலத் தமிழ்ச் சொற்கள்) 1852 என்னும் நூல்களையும் எழுதினார்.

பவர் ஐயர் நன்னூல் இலக்கணத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அந்த மொழிபெயர்ப்பை டாக்டர் கிரால் ஐயர்.14 ஜெர்மனி தேசத்தில் லீப்ஸிக் நகரத்தில் 1855-ஆம் ஆண்டு அச்சிற் பதிப்பித்தார். பவர்ஐயர் தாம் இயற்றிய வேதஅகராதியின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் இது:

66

"சீர்பெருகு பரமண்ட லாதிபதி யாவிலுஞ்

சிறந்த காரண ராகிய

திரியேக தேவனே யுமதருளினா லடிமை

செய்யத் துவக்கி யிந்தப்

பேர்பெருகு வேத அகராதியை முடித்ததாற் பேதையேனு மது சமுகம்

பெருமையுற வெண்ணியே திருவடி மலர்க்குமுன் பெலவீன காணிக் கையாய்

நேர்பெருக வைக்கிறேன் ஏற்றிதளை வாசிக்கு நீணிலத் தோர்கட் கெலாம்

நெஞ்சினிற் பதியுமஞ் ஞானவிரு ளோடவும்

நிலைபெற்ற பாவ மறவும்