பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

ஏர்பெருகு நற் சத்திய வேதமே யெவரிலு

மிருந்து நன்மாட்சி பெறவும்

ஏகனே கிருபை செய்தாசீர் வதித்தருளும்

எந்தையே முந்து பொருளே.

பீற்றர் பெர்சிவல் ஐயர்15

235

வெஸ்ஸியன் மிஷனைச் சேர்ந்தவர் இவர். ஐரோப்பியர். 1833- இல் யாழ்ப்பாணத்துக்கு வந்தார். யாழ்ப்பாணத்துக் கல்லூரியை நிறுவினார். தமது தமிழ்ப் பண்டிதரான ஸ்ரீ ஆறுமுகநாவலர் உதவியைக் கொண்டு காண்டு விவிலிய விவிலிய நூலை மொழிபெயர்த்தார். யாழ்ப்பாணத்தில் 17 ஆண்டு கிறிஸ்து சமய ஊழியம் செய்தார். கிறிஸ்து சமயத் துண்டுப் பிரசுரங்களை எழுதி அச்சிட்டார். 1842-இல் தமிழ்ப் பழமொழிகளைத் திரட்டி ஆங்கில மொழி பெயர்ப்புடன் அச்சிட்டார். தமிழ்ப் பழமொழிகளின் இரண்டாவது பதிப்பை 1874-இல் அச்சிட்டபோது 6156 பழமொழிகளை ஆங்கில மொழி பெயர்ப்புடன் அச்சிட்டார். தமிழ்-ஆங்கில, ஆங்கில-தமிழ் அகராதிகளை எழுதி அச்சிட்டர். 1855-இல் சென்னையில் தினவர்த்தமானி என்னும் செய்தித்தாளை வார இதழாக அச்சிட்டார். முதன் முதல் வெளியான தமிழ்ச் செய்தித்தாள் இதுவே.

மழவை மகாலிங்கையர்

மதுரைக்குக் கிழக்கிலுள்ள மழவராயனேந்தல் என்னும் ஊரில் பிறந்தவர். மழவரானேந்தல் என்பது மழவை எனக் குறுகியது. வீரசைவ மரபினர். சென்னையில் பெரும்புலவர்களாக இந்த வீரசைவர்களாகிய திருத்தணிகை விசாகப் பெருமாளையர், சரவணப்பெருமாளையர் என்னும் சகோதரர்களிடம் தமிழ் பயின்றவர் இவர். கல்லூரிகளில் தமிழாசிரியராக இருந்தார். மகாவித்துவான் காஞ்சிபுரம் சபாபதி முதலியாருடன் நட்புள்ளவர். தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையுடன் 1847-இல் சென்னையில் அச்சிற் பதிப்பித்தார். அருணாசல புராணத்திற்கு உரை எழுதினார். இலக்கணச் சுருக்கம் என்னும் நூலை 1879-ஆம் ஆண்டில் எழுதினார்.

மீனாட்சி சுந்தரக் கவிராயர்

இவருடைய ஊர் முகவூர். சேற்றூர் மன்னரிடம் புலவராக இருந்த கந்தசாமிக் கவிராயரின் மகனார் இவர். தந்தையாரிடத்தில் கல்வி