பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

அறத்தின் வழிக்கே நிறக்கச் செய்யும்

கருத்தும் பண்பும் அருத்தியு முடையோன் பெருமையாந் தெய்வத் திருவுரு வங்களை யாவருங் கண்டு சேவை செய்யும் பொருட் டெழுதிக் கொடுக்கும் பழுதிலாச் சிற்ப சாஸ்திர நிபுணன் மாத்திரை யளவும் வீண்பொழு தாக்கான் காண்பவர்க் கெளியன் பெரிய புராணத் தரியநற் றொண்டர் குங்கிலி யக்கலயங்கரத் தேந்திப் பவசாகரம் போய்ச் சிவசா யுச்சியம் பெற்றவர் சரிதமும் குற்றமற் றோங்கும் அறிவித்தகர் சொல் எறிபத்த நாயனார்

அன்பின் திறத்தையும் இன்புடன் கீர்த்தனை இயற்றிய தொண்டன் வயித்திய லிங்கன் என்னு நாமந் துன்னிய

பகரருஞ் சேடனை நிகர்புல வோனே.'

வரதராஜுலு நாயுடு

போகல ராமகோபால சேஷாசலம் நாயுடு என்பவர் தெலுங்கு மொழியில் எழுதிய ஜடபரதோபாக்கியானம், ஸ்ரீராமஹிதயம் என்னும் ஷட்சக்கரவர்த்திகளின் இந்திரஜாலக் கதைகள், சுத்த நிராலம்ப மார்க்கம் என்னும் மூன்று நூல்களையும் அதே பெயருடன் தமிழில் மொழி பெயர்த்து எழுதி 1898-ஆம் ஆண்டில் அச்சிற்பதிப்பித்தார். விசாகப் பெருமாள் ஐயர்

இவர் வீர சைவ மரபினர். தமிழ்ப்புலவராகிய திருத்தணிகை கந்தப்பையரின் மகனார். சரவணப் பெருமாளையர் இவருடைய இளவல். இயற்றமிழாசிரியராகிய இராமாநுசக் கவிராயரிடம் கல்வி பயின்றார். “கனம் பொருந்திய கம்பேனியாரால் நியமிக்கப்பட்ட யூனிவர்ஸிட்டி என்னும் சகலகலா சாஸ்திரி சாலை”யில் தலைமைத் தமிழ்ப் புலவராக இருந்தார். உவின்ஸ்லோ தமிழகராதி எழுதுவதற்கு உதவி செய்தார்.

ஆம்

இது.

இலக்கணச் சுருக்க வினாவிடை என்னும் நூலை எழுதி 1828- ஆண்டில் அச்சிற் பதிப்பித்தார். அந்நூலில் தற்சிறப்புப் பாயிரம்