பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

நாவலர் வியக்கப் பாவலர் நாவான்

நன்கலை மதிவளர்ந் தோங்கிப் பாவலர் முகஞ்செம் பதுமமாக் குவிக்கும்

பான்மையோன் மாயனோ டுளந்து

மாவலர் வீரா சாமிவேள் குஞ்சி

மலரயன் றேவிவெண் கஞ்சப்

பூவலர்ந் திருப்ப வதன்மிசை யிருந்த

பொற்பெனப் பொலிந்திலங் குறுமால்.

இராமநுசக் கவிராயரின் மாணவராகிய அஷ்டாவதானம் வீராசாமிக் கவிராயர் என்பவர் இவரே.

வேங்கடசுப்புப் பிள்ளை

தொண்டை நாட்டு அரன்வயல் இவருடைய ஊர்-இவர், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் பழைய மாணவர்களில் ஒருவர். முறையாகப் பாடங் கேட்டு நல்ல தமிழறிஞ ராகவும் செய்யுள் பாடும் ஆற்றல் உள்ளவராகவும் இருந்தார். இவருடைய வரலாறு ஒன்றும் தெரியவில்லை. ப. அரங்கசாமி பிள்ளை யவர்கள் சீவக சிந்தாமணி முதற்பாகத்தை 1883-இல் முதன்முதலாக அச்சிற் பதிப்பித்தபோது கீழ்க்கண்ட சாற்றுக்கவிகளை வேங்கடசுப்புப் பிள்ளை பாடியுள்ளார்.

இலக்கணங்கள் முழுதுநிறைந் திலக்கியத்துக் கோரிலக் காயிலகுஞ் சீர்சால் நலக்கணுயர் காவியமாஞ் சீவகசிந் தாமணியைநாட்டி லுள்ள

வலக்கணத்துக் கொல்லாத விரதியரும் புலவர்களும் மகிழ்ந்து வாழ்த்தத் தலக்கணறுங் கவியரங்க சாமிநல் லோன் றானச்சிற் பதிப்பித் தானே.

பதிப்பித்தான் பிரதிகளிற் கரலிகித

வழுக்களைந்து பாவலோருள்

உதிப்பித்தான் பேருவகை யஃதேபோற்

கொல்லாத ஒழுக்கத்தோரைக்

குதிப்பித்தான் றம்மதனூ லெம்மதத்தும் பரவவரும் கொள்கையாலே

மதிப்பித்தான் றனையுலகி லெழிலரங்க

சாமிநல்லோன் வல்லோன் மாதோ.