பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

புலியூர் வெண்பாவுக்கு உரை எழுதிய இவர், வேறு நூல் களும் இயற்றியிருக்கிறரா என்பது தெரியவில்லை.

ஸ்ரீ நிவாச ராகவாசாரியார்

சென்னை சர்வகலாசாலைத் தலைமைத் தமிழ்ப் பண்டிதராக இருந்தார். உத்தரராமாயண வசனம், விஷ்ணு புராண வசனம், தசகுமார சரிதம் முதலிய மொழி பெயர்ப்பு நூல்களும், கதா சங்கிரகம் என்னும் வசன நூலும் தண்டியலங்கார சாரம் (1873) என்னும் நூலும் இவரால் எழுதப்பட்டன.

அண்ணாச்சாமி முதலியார்

தொண்டை நாட்டு அமரம்பேடு இவர் ஊர். இவரைப் பற்றிய வரலாறு தெரியவில்லை. இவர், அராபிக் கதையைத் தமிழில் மொழிபெயர்த்து 1876-ஆம் ஆண்டில் சென்னை சிந்தாதிரிப் பேட்டை பிரபாகர அச்சுக் கூடத்தில் பதிப்பித்தார். இந்நூலுக்கு அப்பாவு உபாத்தியாயர் அவர்கள் அளித்த சாற்றுக்கவி:

சிறந்திடு மராபிக் கதையினை யெவருஞ் செப்பமா யுணர்ந்தின்ப மேவக் கறந்திடு பாலின் சுவையெனத் தமிழாற் கவினுற மொழிபெயர்த் திட்டான் துறந்திடு பெரியோர் மறையவர் வியந்து சொற்றிடு மாசியும் வளனும் நிறைந்திடு மமரம் பேட்டில்லா ழண்ணாச் சாமியா நிபுண நாவலனே.

தரங்காபுரம் சண்முகக் கவிராயர் அளித்த சாற்றுக் கவி: பேர்பெறு மராபிப் பாஷையிற் பிறந்து பெருந்துறை முகமெலாஞ் சிறந்து

சீர்பெறும் பாஷாந் திரங்களு டுழன்று திருந்திய கதை முகச் செல்வி கார்பெறு மமரம் பேட்டில்வா ழண்ணாச்

சாமிதன் கருத்தினாற் பொருந்தி யேர்பெறுந் தமிழா லலங்கரித் தெழுந்தா

ளியாவரு மின்புறற் பொருட்டே.

ஞானசித்த சுவாமிகள்

திருக்குருகூர் ஞானசித்த சுவாமிகள் என்று கூறப்படுவார் இவர். இவரைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. சாத்திரக் கோவை சேத்திரக்