பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரிய - மாணவர் பரம்பரை விளக்கம்

அவை;

பண்டைக் காலத்தில் கல்வி இரண்டு நிலையாக இருந்தது. கணக்காயரிடத்தில் கற்கும் பாட சாலைக் கல்வி: வித்துவான்களிடத்தில் கற்கும் உயர்தரக் கல்வி என்பன. முதல் முதலாகச் சிறுவர்கள் கணக்காயரிடத்தில் சென்று சென்று கிராமப் பாடசாலையாகிய திண்ணைப் பள்ளிக்கூடத்தில் எழுதப்படிக்கக் கற்றுக் கொள்வார்கள். பிறகு நீதி நூல்களையும் இலக்கணச் சூத்திரங்களையும் நிகண்டு, இலக்கணம் முதலிய கருவி நூல்களையும் மனப் பாடம் செய்வார்கள். இவற்றுடன் இவர்கள் பாடசாலைப் படிப்பு முடிந்து விடும். பிறகு, இவர்கள் வித்துவான்களிடம் சென்று இலக்கண இலக்கிய நூல்களைப் நூல்களைப் பாடங் கேட்டுப் பொருள் உணர்ந்து கொள்வார்கள். காரிகை கற்றுக் கவிபாடவும் பழகிக் கொள்வார்கள்.

இவ்வாறு ஆசிரிய ஆ மாணவர் பரம்பரை அக்காலத்தில் தொடர்ந்து வந்தது. ஒரே மாணவர் வெவ்வேறு ஆசிரியர் இடத்தில் பாடங் கேட்பதும் உண்டு. ஒவ்வோர் ஆசிரியர் ஒவ்வொரு நூலைப் பாடஞ் சொல்வதில் தேர்ந்தவராயிருப்பர். யார் யார் எந்தெந்த நூல்களில் தேர்ந்தவரோ அவரவரிடம் சென்று அந்தந்த நூல்களைப் பாடங்கேட்பது வழக்கம். இவ்வாறு ஆசிரிய - மாணவர் பரம்பரை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் இருந்தது.

ஆசிரிய மாணவர் பரம்பரைப் பட்டியலை எனக்குத் தெரிந்த வரையில் கீழே தருகிறேன். இதனை முழு விவரப் பட்டியல் என்று கூற முடியாது. சில பெயர்கள் விடுபட்டிருக்கவும் கூடும். தெரிந்த வரையில் பட்டியல் தரப்படுகிறது.