பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

269

இளம்பூரணர் உரையிலே கைந்நிலைச் செய்யுட்கள் நான்கு இடங்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளதைக் காணமுடிந்தது. எனவே, கைந்நிலை பதினெண் கீழ்க்கணக்கு நூலைச் சேர்ந்தது என்பதும், அதன் செய்யுட்களை இளம்பூரண அடிகள் என்னும் உரையாசிரியரும் தமது உரையில் மேற்கோள் காட்டியுள்ளார் என்பதும் தெரியலாயின. கைந்நிலை அகப்பொருள் இலக்கிய நூல்.

இன்னிலை

இப்பெயரையுடைய நூல் ஒன்று அண்மைக்காலத்தில் வெளிவந்துள்ளது. இது கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டில் ஒன்று என்று தவறாகக் கருதப்பட்டது. பிறகு, இது கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூலன்று என்றும் போலி நூலென்றும் அறியப்பட்டது. இன்றும் சிலர் இதனைக் கீழ்க்கணக்கு நூல் என்று உண்மையறியாமல் நம்புகின்றார்கள். ஆகவே. இந்நூலைப் பற்றிய வரலாற்றைக் கூற வேண்டுவது முறையாகும்.

கீழ்க்கணக்கு நூல்களைக் கூறுகிற 'நாலடி 'நாலடி நான்மணி’ எனத்தொடங்கும் பழைய வெண்பாவின் பின் இரண்டடிகள்,

66

"இன்னிலை சொல் காஞ்சியுடன் ஏலாதி என்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு

என்பது. இதில் காஞ்சிக்கு (முதுமொழிக்

காஞ்சிக்கு)

டைமொழியாகிய இன்னிலை சொல் என்பதை இன்னிலை, இன்சொல் என்னும் பெயருள்ள இரண்டு நூல்கள் என்று சென்ற நூற்றாண்டிலிருந்த சி.வை. தாமோதரம்பிள்ளையவர்கள் கருதினார்கள். கைந்நிலை என்பது ஒரு நூலின் பெயர் என்பதை அவர் அறிய வில்லை.

பின்னர், கைந்நிலை என்பது கீழ்க்கணக்கில் ஒரு நூல் என்பதைக் கனகசுந்தரம் பிள்ளையவர்களால் அறிந்த பிறகு 1889- ஆம் ஆண்டில், “இன்னிலை சொல் என்பதற்கு இன்னிலை, இன்சொல் என இரண்டு நூல்களாகாது காஞ்சிக்கு விசேஷணமாகவும், கைந்நிலை யென்றது வேறொரு தனி நூலாகவும் கொள்ளத்தகும் என்று இலக்கண விளக்கப் பதிப்புரையிலே எழுதினார்கள். ஆனாலும் இன்னிலை என்பது ஒரு நூலின் பெயர் என்று வேறு சிலர் அக்காலத்தில் நம்பினார்கள். நம்பினது மட்டுமல்லாமல் அந்நூலைப்