பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

எனவே, இன்னிலை நூற்செய்யுட்களை இளம்பூரண அடிகள் தமது தொல்காப்பிய உரையில் மேற்கோள் காட்டியுள்ளார் என்று இந்நூற் பதிப்பாசிரியராகிய வ.உ. சிதம்பரம் பிள்ளையவர்கள். முகவுரையில் எழுதியிருப்பது தவறானது: உண்மைக்கு மாறானது. இதில் இன்னொரு வியப்பு என்னவென்றால், திரு வ.உ.சி. பிள்ளையவர்கள். எஸ். வையாபுரிப் பிள்ளையுடன் சேர்ந்து தொல் காப்பியம், பொருளாதிகாரம், இளம்பூரணர் உரை முழுவதையும் அச்சிட்டிருக்கிறார்கள். என்பதுதான்.'

994

இன்னிலை நூலை அச்சிட்டு இருபத்தோரு ஆண்டுக்குப் பின்னர் இளம்பூரணர் உரையை அச்சிட்டிருக்கிறார்கள். இதன் பதிப்புரையில், வ.உ. சிதம்பரம் பிள்ளையவர்கள், எழுதியுள்ள கீழ்க்கண்ட பகுதி, இன்னிலைச் செய்யுட்களை இளம்பூரணர் தமது உரையில் மேற்கோள் காட்டியுள்ளார் என்று இன்னுரை முன்னுரையில் இவர் எழுதியது தவறு என்று கூறுவதுபோல (வெளிப்படையாக இல்லாமல்) காணப்படுகிறது. தொல்காப்பியம், பொருளாதிகாரம், இளம்பூரணர் உரைப் பதிப்பில் பிள்ளை யவர்கள் எழுதுவது இது:

"தமிழ்நாடு முழுவதிலும் பொருளதிகார இளம் பூரணருரை முற்றுமடங்கிய பிரதி ஒன்றேயுள்ளது. இப்போது அங்கங்கே ஒரு சிலரிடத்துள்ள பிரதிகளனைத்தும் பிரதிகளனைத்தும் இவ்வேட்டுப் பிரதியைப் பார்த்தெழுதிக் கொண்ட கடிதப் பிரதிகளேயாகும். இக் கடிதப் பிரதிகள் சிலவற்றில் ஒரு சிலவிடங்களில் ஏட்டுப் பிரதியிற் காண்ப்பெறாத விஷயங்கள் ஆதாரமின்றி நுழைத்தெழுதப்பட்டன. அவ்வாறு நுழைத்தெழுதியவற்றை யெல்லாம் களைந்து ஏட்டுப் பிரதியி லுள்ளவாறே இப்பதிப்பு எனது நண்பர் வையாபுரிப் பிள்ளையவர் களாற் சித்தஞ் செய்யப்பட்டுள்ளது.”

இவ்வாறு 1936-இல் எழுதிய திரு. வ. உ. சி. அவர்கள், தாம் 1915- இல் பதிப்பித்த இன்னிலை நூல் முன்னுரையில் எழுதியவை. 'ஆதாரமின்றி நுழைத்தெழுதப்பட்டன” என்பதை வெளிப்படை யாகக் கூறாமல் மறைமுகமாக ஒப்புக் கொள்கிறார்.

66

இனி, இன்னிலை பதிப்புரையில் வ.உ.சி அவர்கள், பேராசிரியரும், உரையாசிரியரும். நச்சினார்க்கினியரும் தமது தொல்காப்பிய உரையிலும், யாப்பருங்கல விருத்தியுரைகாரர் தமது உரையிலும் இன்னிலை நூலிலிருந்து செய்யுட்களை மேற்கொள்