பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

281

மெய்யெழுத்துக்களைப் போலவே எகர ஒகர எழுத்துக்கள் பண்டைக் காலத்தில் புள்ளியிட்டெழுதப்பட்டன என்பதற்குக் கீழ்க்கண்ட பழைய செய்யுட்களும் சான்றாகும்.

66

"நேரிழையார் கூந்தலின் ஒர் புள்ளிபெற நீள்மரமாம்

நீர்நிலை ஓர் புள்ளிபெற நெருப்பாம்

99

நேரிழையார் (பெண்களின்) கூந்தலுக்கு ஒதி என்பது பெயர். ஓதி என்பது பண்டைக் காலத்தில், இலக்கண முறைப்படியும் வழக்க முறைப்படியும் ஒதி என்று எழுதப்பட்டது. இதில் உள்ள ஒகரம் ஒகாரமாகும். இதன் மேல் ஒரு புள்ளி இட்டு ஓதி என்று இப்படி எழுதினால், ஓகாரத்தின் ஒரு மாத்திரை குறைந்து ஒகரமாகி ஒதி என்று படிக்கப்படும். ஒதி என்பது ஒரு மரத்தின் பெயர் (ஒதி மரம்). நீர் நிலைக்குப் பெயர் ஏரி என்பது. இது பண்டைக் காலத்தில், இலக்கண முறைப்படியும் வழக்க முறைப்படியும் எரி என்று எழுதப்பட்டது. இந்த எகரத்தின்மேல் ஒரு புள்ளியிட்டு எரி என்று இப்படி எழுதினால், ஏகாரமாகிய நெட்டெழுத்து ஒரு மாத்திரை குறைந்து எரி என்று படிக்கப்படும். எரி என்றால் நெருப்பு. இதைத்தான் இச் செய்யுள். 'நேரிழையார் கூந்தலின் ஓர் புள்ளிபெற நீள்மரமாம், நீர்நிலை ஓர் புள்ளிபெற நெருப்பாம்.

என்று கூறுகிறது.

எகர ஒகர உயிர்மெய் யெழுத்துக்களுக்கு வீரமாமுனிவர் புதிய வடிவங்களை அமைத்தார். பண்டைக் காலத்தில் கெ, கெ; ஙெ, ஙெ; செ செ; ஞெ, ஞெ; என்று இவ்வாறு எழுதப்பட்டன. இவை முறையே கெ, கே; ஙெ, ஙே;செ, சே; ஞெ, ஞே என்று படிக்கப்பட்டன. இவ்வாறே கொ, கொ; ஙொ, ஙொ; சொ, சொ; ஞொ, ஞொ; என்று மிவ்வாறு எழுதப்பட்டன. இவை முறையே கொ, கோ; நொ, ஙோ; சொ, சோ; ஞொ ஞோ என்று படிக்கப் பட்டன. இவ்வாறு குற்றெழுத்துக்குக் கொம்பின்மேல் புள்ளி வைத்தும் நெட்டெழுத்துக்குக் கொம்பின்மேல் புள்ளி வைக்காமலும் எழுதப்பட்டதை மாற்றி, வீரமா முனிவர் கொம்பின்மேல் புள்ளி வைக்காமல்விட்டால் குற்றெழுத்தாகவும் கொம்பை மேலே சுழித்தால் நெட்டெழுத்தாகவும் படிக்கவேண்டு மென்று புதிதாக ஒரு முறையமைத்தார்.