பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

இயற்றுந் திறன் வாய்ந்திருந்த அவர்கள் நன்றாக வசனம் எழுத அறியாதவர்கள். இக்காலத்தில், அதற்கு நேர்மாறாக, வசனம் எழுதத் தெரிந்தவருக்குச் செய்யுள் இயற்ற முடிகிறதில்லை.

சாற்றுக் கவிகளைப் படிப்பதன் மூலமாக நூலைப்பற்றியும் ஆசிரியரைப் பற்றியும் உரையாசிரியரைப் பற்றியும் பதிப்பாசிரியரைப் பற்றியும் பல செய்திகள் அறிந்துகொள்ள முடிகிறது. அன்றியும் சாற்றுக் கவி வழங்கியவர்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது. இதற்கு மேலாக, ஒரே காலத்தில் இருந்த புலவர்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த நூலை எழுதுவதற்கு அக் காலத்துச் சாற்றுக் கவிகள் எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தன.

சென்ற 19-ஆம் நூற்றாண்டில் வெளிவந்த நூல்களிலே உள்ள சாற்றுக் கவிகளை யெல்லாம் தொகுத்து அச்சிட்டால் அது பெருநூலாக அமையும். அதனால் புலவர்கள் வரலாறும் இலக்கியங் களின் வரலாறும் ஏனைய செய்திகளும் அறிவதற்கு முடியும் உதாரண மாகச் சில காட்டுவோம்.

திருக்கோவலூர் ஆறுமுக சுவாமிகள் “திட்டாநுபூதி' என்னும் நூலை இயற்றினார். அந்நூலுக்குச் சென்ற 19-ஆம் நூற்றாண்டிலிருந்த முத்துக்கிருஷ்ண பிரமம் என்பவர் உரை எழுதி அவ்வுரையுடன் அந்நூலை 1875-ஆம் ஆண்டில் அச்சிற் பதிப்பித்தார். அந்தப் பதிப்புக்கு அக் காலத்தில் அவருடன் பழகிய பல புலவர்கள் சாற்றுக் கவி வழங்கியுள்ளனர். அவர்கள்பெயர் வருமாறு:

புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார், சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை, (அருட்பா இராமலிங்க சுவாமிகள்), சேமங்கலம் வித்துவான் நாராயண முதலியார், திருநீர்மலை கோபாலகிருஷ்ண கவிராஜ சேகரர், தில்லையம்பூர்ச் சந்திரசேகர கவிராஜ பண்டிதர், நரசிங்கபுரம் தமிழ்ப் புலமை வீராசாமி முதலி யார், தாயுமான சுவாமிகள் மரபில் எழுந்தருளிய எடுத்துக்கூட்டி அருணாசல சுவாமிகள், குளத்தூர்க் கரதல மூர்த்தியாகிய சட்டநாத சுவாமிகள், சேங்காலிபுரம் கோயிற்பத்து குழந்தைவேலு ஒதுவார், புரசை அருணாசல சுவாமிகள் மாணாக்கராகிய கா. ஆறுமுக நாயகர், சென்னை இங்கிலீஷ் உபாத்தியாயர் மயிலை குருசாமி முதலியார், தஞ்சை ஆறுமுகப் பிரமம், தஞ்சை இ. குப்புசாமி நாயகர், கொங்குணப்பட்டி தமிழ்ப் பள்ளிக் கூடத்து உபாத்தியாயர் அ. சேஷப் பிள்ளை, தமிழ்ப்