பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

இயல்பு மோனை யெதுகை பற்றி

வீற்றுறு பலவாம் விகற்பமுங் கருதித்

தூக்குத் தோறுந் துகளறு மணிவிரித்

திதனுக் கொப்போ வெந்நூ லுரையுமென் றிருந்தமிழ்ப் புலவ ரெண்ணிலர் பலகாற்

பகர்ந்திடக் கைக்கிளைப் படலமாட் டுஞற்றின

னதன்பின் னவன்றவத் தார்ந்தகான் முளையெனுங்

65

கந்த சுவாமியாஞ் செந்தமிழ் நாவலன் புலமைசேர் சிலர்தம் போதரு முதவியின் மற்றைய படலமுந் தெற்றென விளங்கச் செய்தமருங் கீர்த்தி யெய்தினன் மகிழ்ந்தே.

இலக்கண வினாவிடை

70

1828-ஆம் ஆண்டு சென்னைக் கல்விச் சங்கத்தில் அச்சிற் பதிப்பிக்கப்பட்ட தாண்டவராய முதுலியார் செய்த "இலக்கண வினாவிடை” என்னும் நூலின் பாயிரம்:

"சென்னைக் கல்விச் சங்கத்ததிபராகிய கனம் பொருந்தியா போர்டுத்துரை யவர்களுத்தரவினால் சாலீவாகன சக ஆண்டு 1746- க்கு மேற்செல்லா நின்ற பார்த்திவ ஆண்டுக்குச் சரியான கிரிஸ்து 1825-ஆம் ஆண்டு இலக்கண வினாவிடை செய்து முற்றுப்பெற்றது. பெருநூலுட் புகலறியாப் பிள்ளைகண் ணெளிதுணரப் பேசு வாயோ

ருரைநூல் வினாவிடையாத் தமிழியலென் றருட்குணத்தா னுணர்வின் மிக்கான் அருநூல்கள் விளங்கு சென்னைச் சங்கத்துத் தலைவன் கிளார்க் கதிபன் கூற

விரிநூலாய் கருவியெனத் தொகையுறத்தாண் டவராயன் விளம்பி னானால்.

குற்றமுங் குணமாக் கொளுமறிஞ ரக்கொள்கை மற்றென் பாலினும் வழாரென்ப தறிந்தயான் வழாது கற்றநா வலரிச்சின் னூனும் மவைக்களத்துச்

சொற்றிடர்க் கஞ்சி நிற்பவோ மூதக்கீர் சொல்லீர்.