பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

2

சோமசுந் தரனெனுந் தொன்னூற் குரவன் காமர்செஞ் சேவடி கண்ணிணை யாக்கொண் டியல்பல வுணர்ந்தோ ரெண்ணில ரவருழைத் துயல்வரு கீழ்மையிற் றொடர்கீழ் நிலையினே னில்லையாந் தன்னிக ரெனவுல கோதுறூஉ முல்லையாந் துருவெனு' மொளிகொள் போதகனு மேமசன் மார்க்கத் தியனிலை வழாஅத் தாமசன் கிளர்க்கெனுந் தகைப்புர வலனுந் துராசையினீங்கித் தொன்னெறிவழாஅ விராசஸெனும் பெய ரியற்கோமகனு மின்னூற் குரை யீங்ஙன மியற்றுகவென நன்னூற் குரைபெய நாடின னாவலர் முகநகை நாணா முழுமக னாயினூஉந் தகைகெழு சோம சுந்தரகுரு வருளுக் கென்னா லெனுமகத் தினைப்பலி யீந்து

30

35

40

பீன்னா வதன்வழி பிழையா நிலைநின் றியன்றவை யியற்று மிந்நூலுள்

இத்தலைச் சூத்திரம் யாதுணர்த்திற்றோவெனின், சிறப்புப் பாயிரத் தீலக்கணமாக வகுத்தோதப்பட்ட, நூல் செய்தோன் பெயர் முதலிய பதினொன்றையு முணர்த்திற்றென்க.

விவகார சார சங்கிரகம்

மதுரைக் கந்தசாமிப் புலவர் சென்னைக் கல்விச் சங்கத்தில் இருந்தவர். விவகார சார சங்கிரகம் என்னும் நூலை வடமொழி யிலிருந்து தமிழில் எழுதினார். இது 1894-ஆம் ஆண்டு அச்சிடப் பட்டது. இதன் சிறப்புப் பாயிரம் இது:

திருவருண் மூர்த்தி யோரைஞ் செயலினன் றேவர் தேவா மொருவனல் லிருதா ளன்பி னுளங்கொடு பணிந்து மேன்மை தருவிவ கார சார சங்கிரக மென்னு நாம

மருவிய தருமநூலை வகுத்துரை செய்து நன்றே.

அடிக்குறிப்புகள்

1. Rev. W.H. Drew.

2. Thomson Clark.