பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

உலகினுறு நரர் பலரும் விவகார மெளிதுணர

வுரைநடையி னாற்ற ருமநூ

லொன்றுஞற் றுதியென்று நம்பினர் தமைக்காக்கு முத்தமன் சித்தி யன்சீ

ரிலகுசென் னைத்திறற் சங்கத் தமிழ்த்தலைமை யேற்றரிச் சார்ட்டுக் கிளார்க்

கேந்தல் சொல விங்கிலீ சீரிரண்டாஞ் சார்ச்சி

யிறைநீதி யரசு செயுநா

எலகுகொண் டெண்சாலி வாகன சகாத்தமோ ராயிரத் தெழுநூற் றோடே

ழாறீ ரிரண்டினன் றோங்குமன் றோமன்ன னாளுமதி காரத் தினிற்

சலமின் மனு வாதிமிரு திகளோர்ந்து விவகார

சாரசங் கிரக மெனுநூற்

றன்னைப் புரிந்தனன் றென்னன்மது ரைக்கந்த சாமிநா தப்புலவனே.

அராபிக் கதையின் சிறப்பு

305

1876-ஆம் ஆண்டு அராபிக் கதை தமிழில் மொழி பெயர்க் கப்பட்டு அச்சிடப்பட்டது. இதனை அமரம்பேடு அண்ணாசாமி முதலியார் மொழிபெயர்த்தார். இந்நூல் சென்னை சிந்தாதிரிப் பேட்டைப் பிரபாகர அச்சுக் கூடத்தில் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. இதற்குத் தரங்காபுரம் சண்முகக் கவிராயர் எழுதிய “கதையின் சிறப்பு என்னும் முன்னுரையைக் கீழே தருகிறேன்.

"கடவுளா லேர்ப்படுத்தப்பட்ட கடல்சூழ்ந்த காசினியிற் சிந்துதேச முதலாகிய நமதிந்து தேசத்திலும் முந்த முதற் றொடங்கி அந்தமாக வந்திருக்கின்ற விந்தையான சரித்திரங்க ளெல்லாவற்றிலும் இனிமை பற்றி முதன்மையுற்று மகிமை சொற்ற பெருமை பெற்ற இரசக்கியப் பொருளை வித்வத்திறத்தின் மிகுத்த பிரசித்த சரித்திர விசித்ர கதைத்திற வித்தென யுக்தி விதைத்து விளைத்தருள் புத்தியின் சக்திபொருந்தி யொருத்தி இராவாற் கூறிய அறாபிக் கதையினை முன்னோர் முதலிய முத்திய பெற்றோர்கள் தொன்னூல் நன்னூல் துதிநூல் விதிநூல் என்னூலாகவு மியற்றிய தமிழா லுறுத்தமாகத் திருத்த மாய்ச் செய்து நாவலரும்புகழ்க் காவலரும் மகிழ இச்சை