பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

மேலோங்க வச்சிட்டமையால் (இக்கதை யின் பெருமையைக் காட்டுமிடத்து) ஜெகமெலாம் புரக்குஞ் சிந்து நாட்டிறைவன் தினமொரு விவாகஞ்செய் துதயத்திற் கொன்று விடவேண்டுமென்று குறித்து நடத்திய கருத்தைக் குறைத்து கண்கள் நீர்ததும்பப் பெண்களை யிழந்தோர் பெருந்துயர் களைந்து மந்திரி கொண்ட மருட்சியை மாற்றி ஆயிரத்தெட்டிரா வகற்றி யன்பனோடே யிருத்தின்பமுற்றிளைய மாதுடன் ஷயரஸாட் டென்பவள் சத்தியால் மூன்று புத்திரப் பேறு பெற்று வாழ்ந்திருந்தாள்.

புத்தியால் யுக்தி புகன்ற விக்கதையைப் பத்தியால் வாசிக்கும் பாவலர்கள் முதலிய மற்றெவர்கட்கும் வாசக தாட்டியும் வாக்கின தகலமும் வசனவுசிதமும் வரிசைக் கிரமமும் மரியாதைப் பெருக்கமும் வண்பதப் பொருளும் எழுவாய் பயனிலை இசை சந்தி நிலையும் பிரித்தலும் விரித்தலும் சொற்பயன் புணர்த்தலுந் தொகுத்தலும் வகுத்தலும் அறிவுநிறைவும் அபலக்குறைவும் நெறிநிலை நீதியும் அறம்பொறை ப்ரக்யாதியும் சபைக்குப் யோகமும் தனக்கு வையோகமும் தந்திர யுக்தியும் மந்திரச்சக்தியும் தையலார் சோர்வும் மையலாற் சோர்வும் கடவுளர் பத்தியும் அடையலர் வெற்றியும் கல்வியினூக்கமுஞ் செவ்வியினோக்கமும் நாயகனேசமும் நாயகி பாசமும் தந்தைதாய்ப் பேணலும் தன் பந்து காணலும் தாம்புகழ் பூணலும் தமைக்கண்டோர் நாணலும் நூதன விருந்தும் ஆதனத்திருந்தும் திரைகடலோடியுந் திரவியந் தேடியும் சேர்ப்பன சேர்த்தும் பார்ப்பன பார்த்தும் செவிப்புலன் மகிழ்ந்தும் சிந்தையுட் களித்தும் இன்னமுள்ள நன்மைகள் யாவையும் எளிதிற் பெருந் தெளிவைத்தரு மின் பக்கதை யிஃதன்றியும்.

பெரிய வயதினையுடைய முதியோர்களும் ஆரோக்கிய ஸ்தானஞ் செய்தவர்களும் வியாதிக்காரர் முதலிய மெலிவுள் ளோரும் தங்கள் தங்கள் சுகங்களுக்காக பக்திஸ்ரத் தையினால் சமய சம்பிரதாய சாஸ்திர நூல்களை ஆராய்ச்சி செய்யவாவது கேட்கவாவது ஏற்படும் போது சிலருக்கு உறக்கமும் சோம்பலும் வெறுப்பும் ஓய்வு முண்டாகிற துண்டு. அப்பேர்ப்பட்ட காலத்தில் சொக்கட்டான். சோழி சதுரங்கம் காயிதம் ஆடத் தொடங்கு வார்கள். அந்தச் சமயத்தி லிப்பேர்ப்பட்ட கதையினைப் படிக்கவுங் கேட்கவும் பட்சம் வைப்பார்களாகில் இந்தச் சுதாரசமானது காதின் வழியே கசப்பில்லாம னுழைந்து தேகபீடையை