பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

31

பரீட்சைகளில் தேர்ச்சி பெற்றவர்களின் பெயர் அரசாங்கத்துக் 'கெஜட்'டில் வெளியிடப்பட்டன. அந்தந்த வட்டார மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்குத்தான் சம்பள உயர்வு கிடைத்தது. ஆகவே, ஆங்கிலேய உத்தியோகஸ்தர் இந்த மொழிகளை முயன்று கற்று வந்தார்கள்.

சென்னையில் கலெக்டராக இருந்தவரும் தமிழ்அறிந்த வருமான எல்லீஸ் துரையும், கர்னல் மக்கன்ஸி துரையும் இச்சங்கத்தை நிறுவிய முதன்மையாளர்கள். சிதம்பர உபாத்தியாயர் என்றும் சிதம்பர பண்டாரம் என்றும் பெயருள்ள வித்துவான் இச்சங்கத்தின் தலைமைத் தமிழாசிரியராக இருந்தார். இவர் 1832-ஆம் ஆண்டுக்கு முன்னரே காலமானார். பிறகு, தாண்டவராய முதலியார் அவர்கள் இதன் தலைமைத் தமிழாசிரியர் ஆனார். சிறந்த தமிழ்ப் புலவர்களான முத்துசாமி பிள்ளை, புதுவை நயனப்ப முதலியார், தஞ்சை சரபோஜி அரசரின் அவைப் புலவராக இருந்த கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர், மதுரைக் கந்தசாமிப் புலவர் முதலியோரும் இச்சங்கத்தின் தமிழாசிரியர்களாக இருந்தார்கள். கொற்றமங்கலம் இராமசுவாமி பிள்ளை இச்சங்கத்தின் நூல்நிலையத் தலைவராக இருந்தார்.

இவர்களில் முத்துசாமி பிள்ளையவர்கள் கல்விச் சங்கத்தின் மேற்பார்வையாளராக இருந்தார். இச்சங்கத்தின் தலைவராக இருந்த எல்லிஸ் துரை அவர்கள் விரும்பியபடி, பிள்ளையவர்கள் தமிழ் நாடெங்கும் சுற்றுப் பிரயாணம் செய்து வீரமாமுனிவர் இயற்றிய நூல்களை அக்காலத்தில் அந்நூல்கள் அச்சிடப்படாமல் ஏட்டுச் சுவடியாக இருந்தன தேடிச் சேர்த்துக்கொண்டு வந்தார். வீரமா முனிவர் இயற்றிய நூல்களைத் தேடிக்கொண்டு வந்ததல்லாமல் அவருடைய வாழ்க்கை வரலாற்றினைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பிள்ளையவர்கள் எழுதி அச்சிட்டார்கள்.

இச்சங்கம் இருந்த அதே காலத்தில் இங்கிலாந்து தேசத்தில் ஹலிபரி' என்னும் ஊரில் இது போன்ற கல்வி நிலையம் ஒன்று நிறுவப்பட்டிருந்தது. அந்த நிலையத்தின் பெயர் ‘கனம் பொருந்திய கிழக்கிந்திய கம்பெனியின் கல்லூரி2 என்பது. அரசாங்க ஊழியம் செய்வதற்காக நமது நாட்டுக்கு வந்த ஆங்கிலேயர் அந்தக் கல்லூரியில் நமது தேச மொழிகளில் ஒன்றைக் கற்றுப் பிறகு நமது தேசத்துக்கு வந்தார்கள். அந்தக் கல்லூரியில் கிழக்கு நாட்டு