பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19-ஆம் நூற்றாண்டில் உரைநடை நூல்கள்

19-ஆம் நூற்றாண்டில், நம்மவரும் அச்சியந்திரம் வைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்ட பிறகு தமிழில் உரைநடை நூல்கள் பல வெளி வந்தன. பாடசாலைப் புத்த கங்களாகவும், சமய நூல்களாகவும், கதைகளாகவும், வேறு பொருள் பற்றியும் பல உரை நடை நூல்கள் சென்ற நூற்றாண்டில் அச்சுப் புத்தகங்களாக வெளிவந்தன. அந்நூல்கள் எல்லாவற்றையும் தொகுத்துப் பட்டியலாக அமைப்பது இயலாது. சென்ற நூற்றாண்டில் அச்சுப் புத்தகமாக வெளிவந்த உரை நடை நூல்களில் சிலவற்றை மட்டும் இங்குப் பட்டியலாகத் தருகிறேன். இது முழு விவரப் பட்டியல் அன்று என்பதைக் கருதவேண்டுகிறேன். ஆண்டு நூலின் பெயர்

இராமாயணத் துத்தர

பதிப்பாசிரியர், நூலாசிரியர் பெயர்

1815

திருச்சிற்றம்பல தேசிகர்.

காண்டக் கதை (வால்மீகி

இராமாயணம் உத்தர

காண்டம் வசனம்)

1822

1826

பெஞ்சமின் பாபிங்கடன்.

பரமார்த்த குருவின் கதை

(Benjamin Babington)

(வீரமா முனிவர்

எழுதியது)

பஞ்சதந்திரக் கதை.

1826 கதாமஞ்சரி.

லண்டன் மாநகர்.

மராட்டியிலிருந்து மொழி

பெயர்க்கப் பட்டது.

தாண்டவராய முதலியார்,

சென்னை.

தாண்டவராய முதலியார்,

(1846, 1850, 1860, 1869

ஆண்டுகளிலும் பதிப்பிக்கப் பட்டது.