பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

33

"தமிழ் கற்கப் புக்கோர் தமிழிலெழுதி வழங்குகின்ற பஞ்சதந்திரக் கதையைக் கற்கப் புகுந்தாற் குளிக்கப்புக்கோர் சேற்றைப் பூசிக்கொண்டாற் போல வழுக்களையே கற்றுத் தடுமாற்ற முறுதலால், சென்னைச் சங்கத்துத் தலைவராகிய ஸ்ரீ. ரிச்சர்டுக் கிளர்க்குத் துரையவர்கள் உத்தரவினால், மஹா ராஷ்டிரத்தி லச்சுப்படுத்தி யிருக்கின்ற பஞ்சதந்திரக் கதையைத் தமிழின் மொழி பெயர்த்துச் சொற்பொருளழகுறப் பலவிடத்துச் சில கூட்டியுங் கற்போருலக நடையுஞ் சில செய்யுண்டையுமான தமிழ் நண்குணரவுஞ் சுவையுற விம்மொழி பெயர்ப்புப் பஞ்சந்திரக் கதை, சாலீவாகன சக வருடம் 17464-க்கு மேற் செல்லா நின்ற பார்த்திவ வருடத்துக்குச் சரியான கிரீஸ்து 18254-ஆம் ஆண்டு செய்து முற்றுப் பெற்றது.

கதா மஞ்சரி: 1826-இல் பதிக்கப்பட்டது. இதன் முகப்புப் பக்கம் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

“கதா மஞ்சரி. சென்னைக் கல்விச் சங்கத்துத் தமிழ்த் தலைமைப் புலமைநடாத்தும் தாண்டவராய முதலியாரால் தொகுத்து சாலிவாகன சக வருடம் 17484-க்கு மேற் செல்லா நின்ற விய வருடத்திற்குச் சரியான கிரீஸ்து 18264-ஆம் வருடத்தின் மேற் சொன்ன கல்விச் சங்கத் தச்சு பதித்தது.”

இந்நூலின் பாயிரம் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:-

66

'ஸ்ரீ. ரிச்சர்ட்டுக் கிளார்க்குத் துரையவர்கள் சென்னைக் கல்விச் சங்கத்திற் றலைவராயிருந்த காலத்தில், தமிழ்ப் படிப்போர் தொடக்கத்திற் படிக்கத் தக்கதோர் கதைத் திரட்டுவாயென் றேவ மேற்கொண்டு சில கதைகளைச் சந்தி பிரித்தும் புணர்த்தும் பல கதைகளையவ்வா றின்றி யேற்றவாறு சிலவிடத்துச் சந்தி புணராமலும் பலவிடத்துப் புணர்த்துங் கதாமஞ்சரியென்னும் பெயர்தந் திவ்வாறிக் கதை தாண்டவராய முதலியாராற் றொகுக்கப்பட்டது.

وو

மிருதி சந்திரிகை: விவகார சார சங்கிரகம். இதுவும் 1826-இல் அச்சிடப்பட்டது. இதன் முகப்புப் பக்கம் இது:

66

“தரும நூல். மிருதி சந்திரிகை. விவகார சார சங்கிரகம். சென்னைக் கல்விச் சங்கத்திலிருக்கும் மதுரைக் கந்தசாமிப் புலவரால் செய்யப்பட்டது.