பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையெழுத்துச்சுவடி நூல்நிலையம்

சென்னை அரசாங்கத்துக் கீழ்நாட்டுக் கை யெழுத்துச்சுவடி நூல் நிலையம்' சென்னப் பட்டினத்தில் இருப்பது பலரும் அறிந்ததே. இந்த நூல் நிலையம் 19-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இந் நிலையத்தில் தமிழ்ச் சுவடிகளும் இருக்கிறபடியினாலே, இதன் வரலாற்றை அறிவது நலமாகும்.

இந்த நிலையத்தின் ஏட்டுச் சுவடிகளை முதன் முதலாகத் தொகுத்தவர் கர்னல் காலின் மெக்கன்ஸி என்னும் ஆங்கிலேயர். காலின் மெக்கன்ஸி 1753-ஆம் ஆண்டில் இஸ்காத்லாந்து தேசத்தில் பிறந்தவர். கணித சாத்திரத்தை ஆழ்ந்து பயின்றவர். 1782-ஆம் ஆண்டில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியில் இஞ்சினியர் என்னும் பொறியியல் துறையில் உத்தியோகம் ஏற்றுச் சென்னைக்கு வந்தார். சென்னையிலும் பிறகு இலங்கை, சாவகத்தீவு என்னும் இடங்களிலும் அலுவல் செய்தார். மீண்டும் சென்னைக்கு வந்தார், 1818– ஆம் ஆண்டு சர்வேயர் ஜெனரல் என்னும் உயர்ந்த உத்தியோகம் பெற்றுக் கல்கத்தாவுக்குச் சென்றார். அங்குத் தமது அறுபத்தெட்டாவது வயதில் 1821-இல் காலமானார்.

இவர் வர் சென்னையில் அலுவல் செய்தபோது தெற்கே கன்னியாகுமரி முதல் வடக்கே கிருஷ்ணா நதிவரையில் தமது உத்தியோக அலுவலின் பொருட்டு அடிக்கடி சுற்றுப் பிராயணம் செய்தார். இந்தப் பிரயாண வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, தாம் சொல்லும் இடங்களிலுள்ள ஏட்டுச் சுவடி நூல்களை வாங்கித் தொகுத்தார். இவ்வாறு நமது நாட்டு இலக்கியம், சரித்திரம், பூகோளசாத்திரம், வைத்தியம், புராணம் முதலிய நூல்களின் சுவடிகளைச் சேர்த்துத் தொகுத்தார். ஏட்டுச் சுவடிகளைச் சேகரிப்பதற்கும் சாசனங்களைப் பிரதி எழுதுவதற்கும் சிலரைச் சம்பளங்கொடுத்து அமர்த்தியிருந்தார். இவர் தொகுத்த ஏட்டுச் சுவடிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, அரபி,