பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

37

பாரசீகம், சமஸ்கிருதம் முதலிய மொழிகளில் இருந்தன. இவர் கல்கத்தாவுக்குச் சென்றபோது, இச் சுவடிகளையும் தம்முடன் கொண்டு போனார். கொண்டுபோய் இந் நூல்களுக்குப் பட்டியல் எழுதத் தொடங்கினார். ஆனால், எழுதி முடிப்பதற்கு முன்னரே காலமானார்.

மெக்கன்ஸி காலமான பிறகு இவருடைய ஏட்டுச் சுவடிகளை இவருடைய மனைவியரிடமிருந்து அரசாங்கத்தார் விலை கொடுத்து வாங்கினார்கள். அக்காலத்தில் கவர்னர் ஜெனரலாக இருந்த ஹேஸ்டிங்ஸ் பிரபு, கிழக்கிந்தியக் கம்பெனி டைரக்டர்களின் அனுமதிபெற்று இந்தச் சுவடிகளைப் பத்தாயிரம் பவுன் விலை கொடுத்து வாங்கிக் கல்கத்தாவிலிருந்த ஆசிய சங்கத்தாரிடம்2 ஒப்படைத்தார்.

இந்த ஏட்டுச் சுவடிகளில் தென் இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்னும் மொழிகளில் உள்ள சுவடிகள் 1828-ஆம் ஆண்டு சென்னைக் கல்விச் சங்கத்துக்கு அனுப்பப்பட்டு, அச்சங்கத்தின் புத்தக சாலையில் வைக்கப்பட்டன. இங்கு இந் நூல்களுக்குப் பட்டியல் விவரம் எழுதப்படாமலே இருந்தன. சென்னைக் கல்விச் சங்கத்தில் உபயோகப்படுத்தப்படாமல் கிடந்த இச் சுவடிகளைத் தம்மிடம் சேர்ப்பிக்கும்படி சென்னை இலக்கியச் சங்கத்தார்3 அரசாங்கத்தாரைக் கேட்டுக் கொண்டார்கள். இச்சங்கத்தின் சென்னைக் கல்விச் சங்கத்தி லிருந்த ஏட்டுச்சுவடிகளை 1830-ஆம் ஆண்டு அரசாங்கத்தார் சென்னை இலக்கியச் சங்கத்திடம் சேர்ப்பித்தனர்.

வேண்டுகோளின்படி

இங்கிலாந்திலே ஈஸ்ட் இந்தியா ஹவுஸ்4 என்னும் நிலையத் திலும் ஏட்டுச் சுவடிகள் இருந்தன. அச்சுவடிகளில் தமிழ் தெலுங்கு கன்னடம் முதலிய தென் இந்திய மொழிகளின் சுவடிகள் பயன்படுத்தப்படாமல் வாளா விருந்தன. பயன்படுத்தப் படா மலிருந்த அந்தச் சுவடிகளையும் சென்னையில் உள்ள மெக்கன்ஸி தொகுத்த ஏட்டுச் சுவடிகளுடன் சேர்த்துவிடவேண்டும் என்று சென்னை இலக்கியச் சங்கம் 1843-ஆம் ஆண்டில் அரசாங்கத்தாரைக் ஆ கேட்டுக்கொண்டது. இச்சங்கத்தின் வேண்டுகோளின்படி, அரசாங்கத்தார் அங்கிருந்த ஏட்டுச் சுவடிகளை 1845-ஆம் ஆண்டு டியூக் ஆவ் கார்ன்வால்” என்னும் கப்பலில் ஏற்றிச் சென்னை இலக்கியச் சங்கத்துக்கு அனுப்பினார்கள்.

66