பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாசன எழுத்து, பழம்பொருள் ஆய்வு

(எபிகிறாபியும் ஆர்க்கியாலஜியும்)

பழைய சாசன எழுத்துக்களின் ஆராய்ச்சியும் பழம் பொருள் களின் ஆராய்ச்சியும் அண்மைக் காலத்திலே மேல் நாடுகளில் புத்தம்புதிதாக ஏற்பட்ட சாத்திரக் கலைகளாகும். இவை பழைய எழுத்துச் சாசனங்களை ஆராய்வதும் பழைய கலை நாகரிகம் முதலியவைகளை ஆராய்வதும் ஆகும். இவ்வாராய்ச்சிகளினாலே பன்னூற்றாண்டுகளுக்கு முன்னமே மறைந்துபோன பல செய்திகளை அறியலாம். நமது நாட்டை அரசாண்ட ஆங்கிலேயர் இந்த ஆராய்ச்சிக் கலைகளை நமது நாட்டிலே சென்ற 19-ஆம் நூற்றாண் டிலே அமைத்தார்கள். இந்தக் கலைத் துறைகளை ஆராயும் இலாகா ஏற்பட்டபிறகு, நமது இந்திய நாட்டிலே பல நூற்றாண்டுகளாக மறைந்து சிடந்த பல சரித்திர உண்மைகள் புத்தம் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டன. இந்த இலாகாவினால் தமிழ் நாட்டுக்குப் பெரும் பயன் ஏற்பட்டிருக்கிறது. இந்த இலாகாவினால் ஏற்படும் நன்மைகளைப் பொதுஜனங்கள் இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ளவில்லை. இவ்வாறு ஓர் இலாகா இருக்கிறது என்பதையே பலர் அறியாம லிருக்கின்றனர். மறைந்துபோன பழைய தமிழரின் கலை, நாகரிகம், சரித்திரம், பண்பாடு முதலியவற்றை அறிந்து கொள்ள இந்த ஆராய்ச்சித்துறை பேருதவியாக இருப்பதுடன் தமிழ் இலக்கியம் சம்பந்தமாகவும் பல செய்திகளைத் தெரிந்துகொள்ளப் பேருதவியாக இருக்கின்றது. சென்ற 19-ஆம் தூற்றாண்டிலே ஏற்படுத்தப்பட்ட இந்த இலாகாக்களின் வரலாற்றினைச் சுருக்கமாகக் கூறுவோம்.

ர்

ங்கிலேயக் கிழக்கு இந்தியக் கம்பெனியார் இந்தியா தேசத்துக்கு வந்து வாணிகம் செய்துகொண்டே சிறிது சிறிதாக நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்யத் தலைப்பட்டனர். ஆங்கில அரசாங்க ஊழியர்களாக இங்கிலாந்து தேசத்திலிருந்து பலர் இங்கு வந்தார்கள். அவர்களில் சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவரும் ஒருவர்.