பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

சாசனங்கள் ஏராளமாக உள்ளன. பல சிக்கல் உள்ளதும் விளங்காமலிருப்பதுமான சரித்திரச் செய்திகள் சிக்கறுக்கப்பட்டுத் தெளிவுபட வேண்டும். இந்தத் துறையில் தகுதி வாய்ந்தவர்கள் பலருக்கு இந்த ஆராய்ச்சியில் இடமிருக்கிறது.

"தமிழ்ச் சாசனங்களைப் பதிப்பிக்கும்போது சில விஷயங் களைக் கவனிக்க வேண்டும். மூல சாசனத்திலே சில சொற்களின் எழுத்துக்கள் ஒரே விதமாக எழுதப்படாமலிருப்பதனாலே சாசனப் பதிப்பாளர் சரியான சொல்லையும் பிழையான சொல்லையும் விளக்கிக் காட்ட வேண்டியவராக இருக்கிறார். உதாரணமாக எடுத்துக் காட்டுவோம்: ந், ர் என்னும் எழுத்துக்கள் ன், ற் என்னும் எழுத்துக் களாக மாறுகின்றன. நெட்டெழுத்துக்களான ஏ, ஓ என்னும் எழுத்துக் களை எ, ஒ என்னும குற்றெழுத்துக்களிலிருந்து பிரித்து அறிந்து கொள்ள முடியவில்லை.12 இகர உகர நெட்டெழுத்துக்கள் மிக அருமையாகச் சாசனங்களில் உபயோகப் படுத்தப்பட்டுள்ளன. மெய் எழுத்துக்களின் மேல் இடவேண்டிய புள்ளிகள், இடப்படாமலிருக் கின்றன. மிக அருமையாக மட்டும் புள்ளிகள் இடப்பட்டுள்ளன.3

"

சில எழுத்துக்கள் உருவ அமைப்பு இன்ன எழுத்து என்று தெரிந்துகொள்ள முடியாதபடி எழுதப்பட்டுள்ளன. முக்கியமானது ஈ என்னும் எழுத்து. இந்த எழுத்து ஆகாரத்தைக் குறிக்கும் காலாகவும். ரகரமாகவும் ர் என்னும் மெய்யெழுத்தாகவும் இப்போதைத் தமிழ் எழுத்தில் காண்ப்படுகின்றது. கொ என்னும் எழுத்தைச் சாசனத்தில் கொ என்றும், கோ என்றும், கெர் என்றும், கேர் என்றும், கெர என்றும், கேர என்றும் வாசிக்கலாம். பழைய தமிழ் எழுத்துக்கள் தமிழரைக்கூடச் சில சமயங்களில் மயக்குகின்றன என்பதற்கு ஒர் உதாரணம் காட்டுவோம்: இராசேந்திர சோழ தேவரின் சாசனம் ஒன்றில் கொளா என்று எழுதப்பட்டிந்ததை ஒருவர் கொள்ள என்று எழுதினார்.14 இதன் சரியான வாசகம் கேரளர் என்பது. இராசேந்திர சோழ தேவரின் சிறப்புப் பெயர் கொபரகேசரிபனம் என்று சாசனத்தில் காணப்படுகிறது. கோபரகேசரிபன்ம என்று எழுதவும் படிக்கவும் படவேண்டிய இது கோபாகேசரி வர்ம என்று எழுதவும் படிக்கவும் படுகிறது.

66

"தமிழ்ச் சாசன எழுத்துக்களின் இடையிடையே கிரந்த எழுத்துக்களும் சொற்களும் எழுதப்பட்டிருப்பதும் மற்றொரு விசித்திரமாகும்.

99