பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

ஆராய்ச்சி, பூகோள ஆராய்ச்சி (பழைமையும் புதுமையும்), சரித்திர ஆராய்ச்சி, பழங்காசு ஆராய்ச்சி, மொழி இலக்கியம் நாட்டுப் பாடல்கள் முதலியவற்றின் ஆராய்ச்சி முதலிய வற்றைப் வெளியிடு வதாகும். இந்திய தேசத்துப் பழைய சாசனங்களை ஆராய்வதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்த இதழ் நடந்துவந்த காலத்தில், 1888-ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தார் இந்திய சாசனம்'9 என்னும் இதழை வெளியிட விரும்பினார்கள். ஆகவே அரசாங்கத்தார், “இந்தியப் பழமை ஆராய்ச்சி" இதழாசிரியருடன் கலந்து யோசித்து அந்த இதழின் காலாண்டு இணைப்பு வெளியீடாக “இந்திய சாசன”த்தை வெளியிடு வதென்று முடிவு செய்தனர். அதன்படியே இது 1892-ஆம் ஆண்டுமுதல் வெளிவந்தது. இவ்வாறு "இந்திய சாசனம்" 1920-ஆம் ண்டு வரையில் நடந்த பிறகு, இதனை அரசாங்கத்தார் தமது சொந்தப் பொறுப்பில் ஏற்று நடத்தினார்கள்.

"இந்தியப் பழைமை ஆராய்ச்சி”, “இந்திய சாசனம்”, “தென் இந்திய சாசனங்கள்” என்னும் ஆங்கில வெளியீடுகளுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு உண்டு என்று சிலர் கருதக்கூ மேற்போக்காகப் பார்த்தால் இவற்றிற்கும் தமிழுக்கும் யாதொரு தொடர்பும் இல்லாதது போலத் தோன்றும். பழைய இந்திய நாட்டுச் சரித்திரம், கலை, நாகரிகம், பண்பாடு முதலியவற்றை அறிவதற்கு இந்த வெளியீடுகள் பெரிதும் பயன்பட்டது போலவே, தமிழ்நாட்டு வரலாறு, கலை, நாகரிகம், பண்பாடு முதலியவற்றை அறிவதற்கும் இந்த இதழ்கள் உதவியாக இருந்தன். இந்த இதழ்கள் வெளிவராமலிருந்தால் இவைகளையெல்லாம் நாம் அறிந்திருக்க முடியாது.

உதாரணமாக, அசோக சக்கரவர்த்தி காலத்துக்கும் மொகலாய சக்கரவர்த்திகள் காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தில், இந்திய தேசத்து வரலாறு அறிய முடியாமல் அந்தக் காலத்தில் இருளடைந் திருந்தது. இந்த இதழ்கள் தோன்றிச் சாசனங்களையும் பழம் பொருள்களையும் ஆராய்ந்து வெளியிட்ட பிறகு, இருளில் மறைந்து கிடந்த உண்மைகளும் வரலாறுகளும் வெளிப்பட்டு, பழைய வரலாறுகள் எழுதப்பட்டன. அவ்வாறே தமிழ் நாட்டுச் சரித்திரம், கலை, பண்பாடு முதலிய செய்திகள் இருளில் மறைந்து கிடந்தவை, இந்த இதழ்கள் தோன்றி, சாசனங்களும் பழம் பொருள்களும் ஆராய்ந்து வெளியிடப்பட்ட பிறகு அவையெல்லாம் நமக்குத் தெரியவந்தன. மறைந்து சிடந்த அரசர் வரலாறு, சேர சோழ பாண்டியர் வரலாறு முதலியவை இந்த