பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

47

இதழ்கள் வெளிவந்த பிறகுதான் நமக்குத் தெரிய வந்தன. சென்ற 19- ஆம் நூற்றாண்டிலே இவை தமிழிலக்கிய வளர்ச்சிக்குப் பயன்படவில்லை யானாலும், இந்த 20-ஆம் நூற்றாண்டிலே இந்த இதழ்கள் தமிழ் ஆராய்ச்சி, தமிழ் நாட்டு வரலாற்றாராய்ச்சி முதலியவைகளுக்குப் பெரிதும் உதவியாக உள்ளன. மறைந்துபோன சேர, சோழ, பாண்டிய, பல்லவ அரசர்களின் வரலாறுகளை அறிவதற்கும், மறைந்து கிடந்த தமிழ்ச் சாசனங்களைப் படித்தறிவதற்கும் இந்த வெளியீடுகள் காரணமாக இருந்தன; இருக்கின்றன என்பதை நாம் மறக்க முடியாது. இன்னும் மறைந்து கிடக்கிற தமிழ்நாட்டுச் சாசனங்களையும் பழம்பொருள்களையும் கண்டுபிடித்து வெளிப்படுத்துமாறு ஆர்க்கியாலஜி, எபிகிறாபி இலாக்காக்களைத் தமிழர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

1. Asiatic Society.

2.

Asiatic Researches

3. James Prinsep

அடிக்குறிப்புகள்

4.

Alexander Cunningham

5.

Journal of the calcutta society.

6.

7.

Archaelogical surveyor and Reporter to Government.

The Indian Treasure Trove Act. (Act vi of 1878)

8. The Director - General of Archaeology.

-

9. Dr. James Burges

10. South Indian Inscriptions, Epigraphia Indica, Indian Antiquary.

11. திரு. வெங்கயா அவர்கள் அந்தக் காலத்தில் சாசன ஆராய்ச்சி இலாகாவில் சாசன ஆராய்ச்சி செய்யக் கற்றுக் கொண்டவர்.

12. ஓ என்னும் எழுத்துக்களின் உருவ அமைப்பு, 18 ஆம் நூற்றாண்டிலிருந்து பேர் பெற்ற பெஸ்கி பாதிரியாராகிய வீரமாமுனிவரால் புதிதாக அமைக்கப்பட்டவை. இதுபற்றி இந்நூலாசிரியர் எழுதியுள்ள "கிறிஸ்துவமும் தமிழும்" என்னும் நூலின் இரண்டாம் மூன்றாம் பதிப்புக்களில் காணலாம்.

7

13. "மெய்யினியற்கை புள்ளியொடு நிலையல்”, “எகர ஓகரத் தியற்கையும் அற்றே", என்று தொல்காப்பியமும்,

"தொல்லை வடிவின எல்லா வெழுத்து மாண்டு எய்தும் எகரம் ஒகரம் மெய் புள்ளி'

என்று நன்னூலும், “எகர ஒகர மெய்யிற் புள்ளி மேவும்” என்று வீர சோழியமும் கூறுகின்றன. அஃதாவது, எகர ஒகரக் குற்றெழுத்துக்களும், மெய் எழுத்துக்களும் மேலே புள்ளி பெறும் என்பது பொருள். ஆனால் பண்டைக் காலத்தில் பனை ஓலையில் எழுத்தாணியால் எழுதியவர்களும், கல்லிலும் செப்பேட்டிலும் சாசனங்களை எழுதிய சிற்பிகளும் இந்த இலக்கண விதிகளைக் கவனிக்காமல், பெரும்பாலும் அவ்வெழுத்துக்களின் மேல் புள்ளி வைக்காமலே எழுதினார்கள். இவைகளை வாசிக்கும்போது பலவகையான ஐயங்கள் தோன்றுவது வழக்கம். இதைத்தான் இவர் இங்குக் குறிப்பிடுகிறார்.

14. Madras Christian College Magazine Vol. V. P. 41. Text. line 2.

15. South Indian Inscriptions vol. I. 1890. Preface.

16. The Indian Antiquary

18. Captain R.C. Temple

17. Dr. I.F. Fleet.

19.

Epigraphia Indica