பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய முறையில் தமிழ்க் கல்வி

19-ஆம் நூற்றாண்டிலே தமிழ்க் கல்வி இரண்டு விதமாகப் பயிற்றுவிக்கப்பட்டது. அவை ண்பழைய முறைக் கல்வி, புதிய முறைக் கல்வி என்பனவாம். பழைய முறைக் கல்வி என்பது ஆசிரிய மாணவர் வழிமுறை. புதியமுறைக் கல்வி என்பது மேல்நாட்டு முறையைப் பின்பற்றியது. இதனைக் கற்பித்தவர் மிஷனரிமாரான கிறித்தவர். பழைய முறைக் கல்வியைக் கற்பித்தவர் கணக்காயர், வித்துவான், மகாவித்துவான், கவிராயர், நாவலர் என்று பேர் பெற்ற புலவர்கள்.

அக்காலத்தில் கிராமங்கள் தோறும் சிறு பாடசாலைகள் இருந்தன. கிராமப் பாடசாலை, பெரும்பாலும் கிராமப் பெரியமனிதரின் வீட்டுத் திண்ணையில் இருக்கும். கோயில் மண்டபங்களிலும் இருப்பதுண்டு. பெரும்பாலும் திண்ணைகளில் நடைபெற்று வந்தமை யால் திண்ணைப் பள்ளிக்கூடம் என்று பெயர் பெற்றிருந்தது. திண்ணைப் பள்ளிகளில் கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்குக் கணக்காயர் என்பது பெயர்.

6

கை

அக்காலத்தில் கற்பலகைகளும் எழுது குச்சிகளும் கிடையா, காகிதமும் பேனாவும் பென்சிலும் கிடையா. வகுப்புக்குத் தக்கபடி பாடப் புத்தகங்களும் கிடையா. தரையிலே மணலைப் பரப்பிக் விரலினாலே எழுத்தின் வரிவடிவத்தைச் சிறுவர் எழுதிப் பழகினார்கள். எழுதும் போது தாம் எழுதும் எழுத்தின் ஒலியை உரத்துச் சொல்லிக்கொண்டே எழுதுவார்கள்'. எழுத்துக்களைப் பயிலும் மாணவரின் இரைச்சலும் செய்யுள்களை நெட்டுருப் பண்ணும் இரைச்சலும் தெரு முழுவதும் ஒலிக்கும்.

எழுத்துக்களைக் கற்ற சிறுவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, வாய்பாடு முதலியவற்றை நெட்டுருச் செய்வார்கள். இவற்றை மனப்பாடஞ் செய்த பிறகு நிகண்டு, திவாகரம், நன்னூல், சின்னூல் முதலிய நூல்களை நெட்டுருப்போட்டு மனப்பாடஞ் செய்வார்கள். ஏடுகளில் எழுத்தாணியால் எழுதிப் பழகுவார்கள்.