பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

பாடசாலைகளில், மேல்நாட்டுப் புதிய முறைப்படி கல்வியைப் புகட்டியவர் கிறிஸ்துவப் பாதிரிமாரே. கணக்காயர்களான ஆசிரியர் களுக்குப் போதனா முறைகளைக் கற்பித்து அத்துறையில் பழகிப் பயிற்சிபெற்ற ஆசிரியர்களைக்கொண்டு பாடசாலைகளில் பாடங் கற்பித்தார்கள். ஆண் பாடசாலைகள் மட்டும் அல்லாமல் பெண் பாடசாலைகளையும் அமைத்துப் பெண் கல்வியையும் வளர்த்தார்கள். பாடசாலைகளில் வகுப்புகளுக்குத் தக்கபடி பாடப்புத்தகங்களை அமைத்து அப்புத்தகங்களைக் கொண்டு பிள்ளைகளைப் படிப்பித்தார்கள். பிழையின்றி எழுதப் பழகு வதற்குச் சொல்வதெழுதல் என்னும் ‘டிக்டேஷன்’ பயிற்சியையும் புகுத்தினார்கள். பூகோளம், சரித்திரம், இயற்கைப் பாடம் முதலிய பாடங்களைக் கற்பித்து மாணவர்களுக்குப் பொது அறிவைப் புகட்டினார்கள். வானநூல் உடல்நூல் முதலிய விஞ்ஞான (சயன்ஸ்) நூல்களையும் கற்பித்தார்கள். இந்நூல்களை யெல்லாம் தாய் மொழியாகிய தமிழிலே கற்பித்ததோடு, இந்நூற் புத்தகங்களைத் தமிழிலே எழுதி வெளியிட்டார்கள்.

பழைய திண்ணைப் பள்ளிக்கூடங்களில் இத்தகைய புதிய பாட அமைப்புகள் ஏற்படவில்லை. திண்ணைப் பள்ளிக்கூடங்களுக்கும் இந்தப் பள்ளிக்கூடங்களுக்கும் எவ்வளவோ வேறு பாடுகள் இருந்தன.

கிறிஸ்துவ மிஷனரிமார் செய்துவந்த கல்வித் தொண்டு இருக்க, ஆங்கில அரசாங்கத்தாரும் புதிய பாடசலைகளை அமைத்து மேல்நாட்டு முறைப்படி கல்வி கற்பித்தார்கள். பாடசாலைகள் மட்டும் அல்லாமல், கல்லூரிகளையும் பல்கலைக் கழகத்தையும் அமைத்தார் கள். ஆங்கில ஆட்சியினர் கிறிஸ்து சமயத்தவர் ஆகலின் அவர் செய்த கல்வித்தொண்டு கிறிஸ்து மதத் தொண்டென்று ஒரு வகையில் கூறலாம்.

2

கல்வித்துறை இலாகா1 1854-ஆம் ஆண்டில் அமைக்கப் பட்டது. இந்த இலாகாவின் சார்பாக ஒர் அச்சியந்திரசாலை நிறுவி அதன் மூலமாகப் பாடப் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. வாரச் செய்தித்தாள் ஒன்றையும் இது அச்சிட்டு வந்தது. சில ஆண்டுகளுக்குப் பின்னர், வேறு அச்சியந்திரச்சாலைகள் தோன்றியபடியால் இந்த அச்சியந்திரசாலை 1868-இல் மூடப்பட்டது. ஆனால் பாடப்புத்தகங் களை வெளியிடும்பொறுப்பை இந்த இலாக்காவே 1889-வரையில் ஏற்று நடத்திக்கொண்டு வந்தது. இந்த ஆண்டுக்குப்பிறகு, பாடசாலைப்