பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டுப் பிரசுரங்கள்

1815-ஆம் ஆண்டு சென்னை நகரத்தில் சிறிஸ்துவ மதக் கொள்கைகளைப் பரப்புவதற்காக ஒரு சங்கம்' நிறுவப்பட்டது. இச்சங்கம், கிறிஸ்துமத சம்பந்தமான துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு இலவசமாக வழங்கியது, படிப்பதற்குப் புத்தகங்கள் கிடைக்காத அக்காலத்தில் இந்தப் பிரசுரங்களை மக்கள் ஆவலாகப் படித்தனர்.

1818-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் நாள் “சென்னை சமயத் துண்டுப் பிரசுரச் சங்கம்”2 என்னும் சங்கம் நிறுவப்பட்டு அதன் மூலமாகக் கிறிஸ்துமதச் சார்பான தமிழ்த் துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டு வழங்கப்பட்டன.

1820-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் துண்டுப் பிரசுரங்களை அச்சிடுவதற்காகப் பாதிரிமார் முயற்சி செய்தார்கள். அதற்காக அச்சுத் தொழிலாளர் ஒருவரை அமெரிக்கா தேசத்திலிருந்து வரவழைத் தார்கள். அவர் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தவுடன் அவரைத் திரும்பிப் போய்விடும்படி கட்டளையிட்டு யாழ்ப்பாணத்துக் கவர்னர் பதினைந்து நாள் தவணை கொடுத்துக் கட்டளையிட்டார். ஆனால், பாதிரிமார் தமது முயற்சியைக் கைவிடவில்லை. அச்சுப் பிரதிகளுக்குப் பதிலாகக் கையெழுத்துப் பிரதிகளை வழங்கத் தொடங்கினார்கள். எழுத்தாணி யினால் பனையேடுகளில் பிரதிகளை எழுதுவித்து அவ்வோலை பிரதிகளைக் கிராமங்களுக்குக் கொண்டுபோய் மக்களுக்கு இலவசமாகக் கொடுத்தார்கள். கையெழுத்தை நன்றாக எழுதக் கூடியவர்களுக்குச் சொற்பக் காசு கொடுத்துப் பிரதிகளை எழுதுவித்து அவர்கள் இந்த ஏட்டுப் பிரசுரங்களை வழங்கினார்கள்.

3

1823 -ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 19 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் துண்டுப் பிரசுரசங்கம் நிறுவப்பட்டு, ஏராளமான துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டு வழங்கப்பட்டன.