பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

73

கருத்து. இதே கருத்தை இவர் காலத்தில் இருந்த சிவஞான சுவாமிகளும் வலியுறுத்தினார். சிவஞான சுவாமிகள் தாம் இயற்றிய சோமேசர் முதுமொழி வெண்பாவில்.

சேக்கிழார் சிந்தா மணிப்பயிற்சி தீதெனவே தூக்கியுப தேசித்தார் சோமேசா-நோக்கில் 'பயனில்சொல் பாராட்டு டுவானை மகனெனல் மக்கட் பதடி யெனல்’

என்று கூறினார்.

இதில், சமண சமய நூலாகிய சிந்தாமணி காவியத்தைமட்டும் படிக்கக் கூடாதென்று சொன்னபோதிலும், ஏனைய நூல்களையும் விலக்கியதாகக் கருதப்பட்டது. “சிந்தாமணி என்றது உபலக்கணமா தலின், அதுபோலும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சூளாமணிப் பயிற்சியும் சைவ வைணவ நன்மக்களுக்கு ஆகா” என்று விளக்கம் கூறப்பட்டது.

சிவஞான சுவாமிகளின் மாணவராகிய திருத்தணிகை கச்சியப்ப முனிவர், தம்முடைய மாணவர்கள் சமண சமயக் காவியமாகிய சிவகசிந்தாமணியின் இலக்கியச் சுவையைப் புகழ்ந்து பாராட்டிப் பேசிய படியால், அது பொறாமல் அதைவிடச் சிறந்த சுவையுள்ள நூலை இயற்ற எண்ணித் தணிகைப் புராணம் என்னும் நூலை இயற்றினார் என்னும் வரலாற்றையும் ஈண்டு நினைவு கூர்க.

6

வர்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்தவர்கள். சுவாமிநாத தேசிகர் 18-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்தவர். சிவஞான சுவாமிகள் அந்த நூற்றாண்டில் வாழ்ந்து 1785- ஆம் ஆண்டு காலமானார். இவர் மாணவராகிய கச்சியப்ப முனிவர் 1790-ஆம் ஆண்டில் காலமானார். இவர்கள் செல்வாக்கடைந்திருந்த கல்வி வளர்ச்சிக்குத் தாயகமாயிருந்த சைவ மடங்களைச் சேர்ந்த வர்கள். இவர்கள் பரப்பிவந்த இந்தக் கருத்து. சங்க இலக்கியங் களையும் சமண பௌத்த இலக்கியங்களையும் சைவர்கள் படிக்கக் கூடாதென்னும் கொள்கை - அந்தக் காலத்தில் செல்வாக்கடைந் திருந்தது. இவர்களிடம் கல்வி பயின்ற மாணவர்கள் பலரும் க்கொள்கையை ஆதரித்துப் பின்பற்றினார்கள். சைவமடங்களும் இவர்கள் கொள்கையை ஆதரித்துச் சங்க நூல்களையும் மணி