பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

75

என்றால், இந்த நூல்கள் எவ்வளவு கட்டுப் பாடாகத் திட்டமிடப்பட்டுப் புறக்கணிக்கப்பட் டிருந்தன என்பதை யூகித்தறியலாம்.

டாக்டர் உ.வே. சாமிநாதையருக்குச் சங்க நூல்களைப் பற்றியும் மணிமேகலை, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி முதலிய காவியங் களைப் பற்றியும் முதல் முதலாகத் தெரிவித்தவர் சேலம் இராமசுவாமி முதலியார் ஆவார், ஐயர் அவர்கள் இதனைத் தமது சரித்திரமாகிய என் சரித்திரத்தில் “என்ன பிரயோசனம்" என்னும் தலைப்பில் நன்கு விளக்கி எழுதியிருக்கிறார்.

நல்ல காலம்

1880-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 21-ஆம் நாள் வியாழக்கிழமை யன்று சேலம் இராமசுவாமி முதலியார் என்னும் பெரியாரைக் காணும் வாய்ப்பு உ.வே. சாமிநாதையருக்கு ஏற்பட்டது. அது தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு நன்னாள். பொன் எழுத்தில் பொறித்து வைக்கவேண்டிய பெருநாள். இது பற்றி ஐயர் அவர்கள் எழுதியுள்ளதைப் படியுங்கள்.

66

அச்சமயம் அரியலூரிலிருந்து சேலம் இராமசுவாமி முதலியார் ரென்பவர் கும்பகோணத்துக்கு முன்சீபாக மாற்றப்பெற்று வந்தார். அவரிடம் நல்லூழ் என்னைக் கொண்டு போய்விட்டது. அவருடைய நட்பினால் என் வாழ்க்கையில் ஒரு புதுத்துறை தோன்றியது. தமிழிலக்கியத்தின் விரிவை அறிய முடிந்தது. அந்தாதி, கலம்பகம், பிள்ளைத்தமிழ், உலா, கோவை முதுலிய பிரபந்தங்களிலும் புராணங்களிலும் தமிழின்பம் கண்டு மகிழ்வதோடு நில்லாமற் பழமையும் பெருமதிப்பு முடைய தண்டமிழ் நூல்களிற் பொதிந்து கிடக்கும் இன்றமிழியற்கையின்பத்தை மாந்தி நான் மகிழ்வதோடு, பிறரும் அறிந்து இன்புறச் செய்யும் பேறு எனக்கு வாய்த்தது” (பக்கம் 727. “என் சரித்திரம்” டாக்டர் உ.வே. சாமிநாதையர், 1950 பதிப்பு.)

ஐயரவர்கள் சென்று முதலியாரவர்களைக் கண்ட போது யாரிடம் பாடங் கேட்டீர்கள்?' என்று முதலியார் கேட்டாராம். மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்களிடம் பாடங்கேட்டதாக ஐயர் கூறினாராம். 'என்ன பாடம் கேட்டீர்கள்?' என்றாராம் முதலியார். ஐயர் தாம் பாடம் கேட்ட அந்தாதி, பிள்ளைத் தமிழ் கலம்பகம் கோவை, உலா முதலிய நூல்களின் பட்டியலை அடுக்கடுக்காகக் கூறினாராம்.