பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

இவற்றைக் கேட்ட முதலியார் "இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம்?” என்று கூறினாராம். அவர் கூறியதைக் கேட்டுத் திடுக்கிட்ட ஐயர் தாம் பாடம் கேட்ட புராணங்களின் பட்டியலையும் நைடதம், பிரபுலிங்க லீலை, இலக்கணநூல்கள் முதலிய வற்றின் பெயர்களையும் கூறிக் கடைசியில் கம்பராமயணத்தைப் பாடங் கேட்டதாகவும் சொன்னாராம்.

“சரி, அவ்வளவுதானே? பழை நூல்களில் ஏதாவது பாடங் கேட்ட துண்டா?” என்று வினவினார் முதலியார்.

66

"தாங்கள் எந்த நூல்களைச் சொல்லுகிறீர்களென்று தெரிய வில்லையே?” என்றார் ஐயர்.

"சீவக சிந்தாமணி படித்திருக்கிறீர்களா? மணிமேகலை படித்திருக்கிறீர்களா? சிலப்பதிகாரம் படித்திருக்கிறீர்களா?" என்று கேட்டார் முதலியார்.

இந்நூல்களை யெல்லாம் மடங்களில் படிக்கக்கூடாது, பாடம் சொல்லக் கூடாது என்றிருந்த காலமல்லவா அது? ஐயர் அவர்களுக்கு இவற்றின் பெயர் கூடத்தெரியாதிருந்ததில் வியப்பில்லை. முதலியார் அவர்கள் சிந்தாமனி காவியத்தின் சிறப்பைக் கூறி அதன் பிரதி ஒன்றையும் ஐயரிடம் கொடுத்தார்.

சங்க இலக்கியங்களைப் பற்றிச் சேலம் இராமசுவாமி முதலி யாரவர்கள் தெரிவித்த செய்திகளும் கொடுத்த சிந்தாமணி ஏட்டுப் பிரதியும் ஐயரவர்களின் மனக் கண்ணைத் திறக்கச் செய்தன. பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய சங்க இலக்கியங்களைப் பெறுவதற்கும் அவற்றை ஆராய்ந்து அச்சிடுவதற்கும் ஐயரவர்களைத் தூண்டி ஊக்கப்படுத்தியது முதலியார் அளித்த சிந்தாமணி ஏட்டுச்சுவடி.

18-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலே சாமிநாததேசிகர், சிவஞான சுவாமிகள் காலம் முதல் ஒரு நூற்றாண்டு காலம்வரையில் இருந்து வந்த சங்க நூல்களையும் பௌத்த காவியங்களையும் கற்றல் கூடாது என்னும் வழக்கத்தைச் சேலம் இராமசுவாமி முதலியார் அவர்கள் உ.வே. சாமிநாதையரைக் கொண்டு தகர்த்தெறிந்தார். அக்கொள்கையை மாற்றவேண்டும் என்னும் எண்ணத்துடன் அவர் செய்ய வில்லை. தற்செயலாக நிகழ்ந்த நிகழ்ச்சி இது. ஆயினும், தமிழ்