பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

77

மொழியின் பழைய இலக்கிய நூல்கள் வாழ்வதற்கு ஏற்ற நற்செயலாக முடிந்தது இது.

தமக்குச் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய சங்க இலக்கிய நூல்களை முதன் முதலாக அறிமுகப் படுத்திய சேலம் இராமசுவாமி முதலியார் அவர்கள் காலஞ்சென்றபோது உ.வே. சாமிநாதையர் அவர்கள் மிகவும் மனம் வருந்தினார்.

"1892-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் இரண்டாந் தேதி அவர் உ உலகவாழ்வை நீத்தார். அந்தத் துக்கச் செய்தியைக் கேட்டு நான் துடித்துப் போனேன். அவருடைய பழக்கம் எனக்கு ஏற்பட்டதையும் அதனால் பழந்தமிழ் நூலாராய்ச்சியிலே நான் புகும்படி நேர்ந்ததையும் எண்ணிப் பார்த்தேன். அவருடைய தூண்டுதல் இல்லாவிட்டால் சிந்தாமணியை நான் அச்சிடுவது எங்கே? சங்க நூல்களின் பெருமையை உணர்ந்து இன்புற்று வெளிப்படுத்தும் முயற்சிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?" (பக்கம் 969. ‘என் சரித்திரம்' டாக்டர் உ.வே. சாமிநாதையர் 1950)

நற்காலமாக, ஒரு சேலம் இராமசாமி முதலியார் தோன்றி சங்க இலக்கிய நூல்கள் அழிந்து போகாதபடி காப்பாற்றினார். அவர் தோன்றிக் காப்பாற்றியிராவிட்டால் அந்த நூல்களின் கதி என்னவா யிருக்கும்? அவற்றில் பல அழிந்து போயிருக்கும் அல்லவா? கீழ்க்கணக்கு

கு

18-ஆம் நூற்றாண்டிலே சாமிநாத தேசிகரும் மற்றவர்களும் சைவ நூல்களைத் தவிர மற்ற நூல்களைப் படிக்கக் கூடாது என்னும் கருத்தைப் பரப்பிய காரணத்தினாலே, பதினெண் கீழ்க்கணக் நூல்களில் சிலமறைந்து போகும் நிலை 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்டிருந்தது. கீழ்க்கணக்கு நூல்கள் எத்தனை? அவை எவை என்று ஆராய வேண்டிய அளவுக்கு அந்நூல்கள் சென்ற நூற்றாண்டிலே புறக்கணிக்கப்பட்டிருந்தன.

நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்

இன்னிலைசொல் காஞ்சியுடன் ஏலாதி யென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.

என்பது கீழ்க்கணக்கு நூல்களின் பெயரைக் கூறுகிற பழைய வெண்பா. இதில் கூறப்படுகிற நூல்களில் சில எவை என்பதை