பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

அறியாமல் சென்ற 19-ஆம் நூற்றாண்டிலே புலவர்கள் ஆராயத் தொடங்கினார்கள்.

66

இந்த வெண்பாவில் வரும் ஐந்திணை என்பதைச் சிலர் ஐந்தொகை” என்று பாடம் ஓதி அதற்கு நெடுந்தொகை (அகநானூறு) என்று பொருள் கூறினார்கள்! இச்செய்யுளில் வரும் முப்பால் என்பது திருக்குறளைக் குறிக்கிறது என்பது அறியாமல், "மூன்று தரும நூல்கள் என்று கூறினார்கள் சிலர்! கோவை என்பது ஆசாரக் கோவை என்று அறியாமல், மாணிக்கவாசகர் இயற்றிய “திருக்கோவையார்" என்னும் நூல் என்று கருதினர் சிலர்!

66

மூன்றாவது அடியில் உள்ள இன்னிலை சொல் என்பது “காஞ்சி”க்கு அடைமொழி என்பதறியாமல் "இன்னிலை, 'இன் சொல்” என்னும் இரண்டு நூல்களின் பெயர் என்று கூறினர் ஒருசாரார்! அம்மட்டோ! இன்னிலை என்னும் ஒரு போலி நூலைப் புதிதாக உண்டாக்கி, அது ஒரு பழைய நூல் என்று கூறி அச்சிட்டு வெளிப் படுத்தினார்கள். கைந்நிலை என்னும் நூல் அக்காலத்தில் கிடைக்காத படியினால், அப்படி ஒரு நூல் இல்லை என்று கூறினர் சிலர்.

இது பற்றின விரிவான ஆராய்ச்சியை இந்நூல் ஒழிபியலில் “கீழ்க்கணக்கு நூலாராய்ச்சி” என்னும் தலைப்பில் காண்க.

சங்க நூல்களையும் பிற நூல்களையும் படிக்கக் கூடாது என்று தொடங்கப்பட்ட இயக்கத்தினால், இவ்வாறு தமிழ் நூல்கள் மறக்கப்படுவதற்கும் மறைந்து போவதற்கும் இடமுண்டாயிற்று. ஆனால் நற்காலமாக அந்தக் குறுகிய நோக்கமுடைய கொள்கை மறைந்தொழிந்தது. அக்கொள்கை காரணமாகச் சில நூல்கள் மறைந்து போயின என்பதையும் அறியவேண்டும்.

பாட பேதம்

இவையெல்லாம் சமயக் காழ்ப்பினால் உன்டான குறுகிய மனப்பான்மையைக் காட்டுகின்றன. சமயப் பற்றுக் காரணமாக ஏற்பட்ட இந்தக் குறுகிய மனப்பான்மையினால், பாரதம், கம்பஇராமாயணம் முதலிய நூல்களை 19-ஆம் நூற்றாண்டில் ஏட்டுச் சுவடியிலிருந்து அச்சுப் புத்தகமாக அச்சிட்டவர் சிலர், சிவபெருமானுக்கு ஏற்றந் தந்த செய்யுள்களை மாற்றியும் சிதைத்தும் புதுக்கியும் அச்சிட்டனர். சில நூல்களின் முதலில் அருகக் முதலில் அருகக் கடவுளுக்கு வாழ்த்துக் கூறிய