பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சுக்கூடங்கள்

19-ஆம் நூற்றாண்டிலே தமிழ் நூல்களை அச்சிற்பதிப்பித்த அச்சுக்கூடங்களின் பெயரை நாம் அறிந்த வரையில் கூறுவோம், இதனைக் கூறுவதற்கு முன்பு, அச்சுக்கலை எங்கே தோன்றி உலகத்தில் எவ்வாறு பரவியது என்பதைத் தெரிந்துகொள்வது பொருத்த மாகலின் அதன் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுவோம்.

காகிதம் செய்யவும் அச்சடிக்கவும் முதன் முதல் கண்டறிந்தவர் சீன நாட்டினர். சீன நாட்டவரிடமிருந்து அராபியர் இக்கலைகளைத் தெரிந்து கொண்டார்கள். அராபியராகிய முஸ்லிம்கள், பிறகு இக்கலை களைப் பாரசீகம் எகிப்து முதலிய நாடுகளில் பரப்பினார்கள். முஸ்லிம் நாடுகளில் பரவிய இந்தக் கலைகள் பிறகு ஐரோப்பிய நாடுகளில் பரவின. அச்சுக்கலை கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாக் கண்டம் முழுவதும் பரவியது.

ஆதிகாலத்தில் அச்செழுத்துக்களைத் தனித்தனியாக அச்சுக் கோத்து அச்சிற் பதிப்பிக்கிற முறை தெரியாது. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்துக்கும் எழுத்துக்களை ‘பிளாக்' செய்து புத்தகங்களை அச்சிட்டார்கள். எழுத்துக்களைத் தனித்தனியே அச்சுக் கோத்துப் புத்தகம் அச்சிடும் முறையை முதன்முதல் கண்டு பிடித்தவர் ஜெர்மனி தேசத்தவர். அவருடைய பெயர் ஜோஹன் கூட்டன்பெர்க்' என்பது. அவர் ஜெர்மணி தேசத்து மென்ஸ் நகரத்திலே பிறந்தவர். கி.பி. 1450 வாக்கில் இஸ்த்ராஸ்பர்கு2 நகரத்தில் அவர் அச்சுத்தொழில் நடத்தினார். தனித்தனி அச்செழுத்துக்களை அச்சுக்கோத்துப் புத்தகம் அச்சிடுவதற்கு அவர் வகுத்த அச்சுக்கோப்பு முறை ஜெர்மனி தேசம் முழுவதும் பரவியது. பின்னர் இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்சு, ஒல்லாந்து, போலந்து முதலிய தேசங்களில் அவருடைய அச்சுக் கோப்புக்கலை 1475-ஆம் ஆண்டுக்குள் பரவியது. பின்னர் டென்மார்க்கு, நார்வே, சுவீடன், இஸ்பெயின், இங்கிலாந்து முதலிய தேசங்களிலும் பரவிற்று. கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில்