பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

81

அவருடைய அச்சுக் கோப்புக்கலை ஐரோப்பாக் கண்டம் முழுவதும் பரவியது. அமெரிக்காக் கண்டத்தில் மெச்சிக்கோ நகரத்தில் 1539-ஆம் ண்டு, முதன் முதல் அச்சியந்திர சாலை அமைக்கப்பட்டது.

இந்தியா தேசத்திலே முதன்முதலாக அச்சியந்திரம் நிறுவிய வர்கள் ஐரோப்பியப் பாதிரிமார்கள். அதிலும் தமிழ்நாட்டிலே அவர்கள் முதன் முதலாக அச்சியந்திரசாலை அமைத்துத் தமிழ் மொழியிலே புத்தகங்களை அச்சிட்டார்கள். பாதிரிமார்கள். முதன் முதல் தமிழில் அச்சிட்ட நூல்கள் கிறிஸ்து சமய நூல்களே. தென் இந்தியாவுக்கு அச்சியந்திரங்களைக் கொண்டுவந்த ஐரோப்பியக் சிறிஸ்துவப் பாதிரிமார் தமிழில் அச்செழுத்துக்களை உண்டாக்கினார்கள். (1577 ஆம் ஆண்டில் கோண்ஸால்வஸ் என்னும் பாதிரியார்) தமிழில் அச்செழுத்துக்களை உண்டாக்கிக் ‘கிறிஸ்துவ வணக்கம்' என்னும் நூலை அச்சுப் புத்தகமாக அச்சிட்டார் என்பர். மலையாள தேசத்தில் அம்பலக்காடு என்னும் இடத்தில் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் அச்சியந்திரசாலை சிறிஸ்துமதப் பாதிரிமாரால் நிறுவப் பட்டது. அதில் தமிழ் நூல்களை அச்சிடுவதற்காக இன்னாசி ஆச்சாமணி3 என்பவர் 1679-ஆம் ஆண்டில் தமிழ் அச்சு எழுத்துக்களை உண்டாக்கினார்

என்ப.

இலங்கைத் தீவிலும் தமிழ் நூல்கள் அக்காலத்திலே அச்சிடப் பட்டன. அவ்விடத்திலும் பாதிரிமார்களே தமிழ் நூல்களை அச்சிட்டார் கள். இலங்கையில் பரங்கியரும் (போர்ச்சுகீசியர்) அதன் பிறகு ஒல்லாந்தரும் ஆட்சி செய்த காலத்தில் அச்சுக் கூடங்களை நிறுவி னார்கள். பிலிப்பு தெ மெல்லோ என்னும் தமிழ்ப் பாதிரியார் கிரேக்க மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த புதிய ஏற்பாடு என்னும் விலியவேதம் 1749-இல் இலங்கையில் அச்சிடப்பட்டது. அதன் பிறகு வேறு தமிழ் நூல்களும் அச்சிடப்பட்டன.

தஞ்சைக்கு அடுத்த தரங்கம்பாடியில் டேனிஷ்மிஷன் பாதிரிமார்கள் 18-ஆம் நூற்றாண்டில் அச்சியந்திர சாலையை நிறுவினார்கள். ஜெர்மனி தேசத்தவரான ஸீகன்பால்கு ஐயர்4 தரங்கம்படிக்கு வந்து கிறிஸ்து மதப் பிரசாரம் செய்யத் தொடங்கிய போது, தமிழ் அச்சுப் புத்தகங்கள் இல்லாத குறைபாட்டை யுணர்ந்து, தரங்கம்பாடியில் அச்சியந்திரசாலையை அமைக்க முயன்றார். தமக்கும் மற்றவர்களுக்கும் வேண்டிய தமிழ்ப் புத்தகங்களை ஒலைச்