பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

சுவடியில் எழுதுவித்துக் கொள்வது அதிகப் பொருள் செலவும் காலதாமதமும் ஆகிறது என்றும், அதிகப் பொருட்செலவும் காலதாமதமும் ஏற்பட்டுங்கூட மிகச் சில பிரதிகள் தான் கிடைக்கின்றன என்றும், ஆகையால் பணச் செலவைக் குறைத்துச் சொற்பகாலத்தில் அதிக எண்ணிக்கையுள்ள புத்தகங்களை அச்சிடுவதற்கு உதவியாக அச்சியந்திரத்தையும் தமிழ் அச்செழுத்துக்களையும் உடனே அனுப்பிவைக்க வேண்டும்மென்றும் ஸீகன்பால்கு ஐயர் இங்கிலாந் திலும் ஜெர்மனியிலும் இருந்த மிஷன் சங்கங்களுக்குக் கடிதம் எழுதினார். அவருடைய வேண்டுகோளுக்கு இணங்கி சிறிஸ்துவ ஞான வளர்ச்சிச் சங்கத்தார்5 அச்சியந்திரத்தையும் தமிழ் அச்செழுத்துக்களையும் 1712-ஆம் ஆண்டில் தரங்கம்பாடிக்கு அனுப்பினார்கள். அவற்றுடன் அச்சுத்தொழில் தெரிந்தவர்களும் வந்தனர். 1713-ஆம் ஆண்டு முதல் தரங்கம்பாடியில் தமிழ் அச்சுப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன.

18-ஆம் நூற்றாண்டில் புரோட்டஸ்டண்டுக் கிறிஸ்துவரால் நிறுவப்பட்ட தரங்கம்பாடி அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்ட கிறிஸ்வத் தமிழ்ப் புத்தகங்கள் பொது ஜனங்களுக்கும் விற்கப்பட்டன. அதற்கு முன்பு கத்தோலிக்கக் கிறிஸ்துவப் பாதிரிகள் நிறுவிய அச்சுக் கூடங்களில் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள் பொதுஜனங்களுக்கு விற்கப்படாமல் பாதிரிமார்களின் உபயோகத்துக்காக மட்டும் கொடுக்கப்பட்டன.

மேலே கூறிய இவை எல்லாம் ஐரோப்பியப் பாதிரிமாரால் நிறுவப்பட்ட அச்சுக்கூடங்கள். இந்த அச்சுக் கூடங்களில் கிறிஸ்து மதச்சார்பான புஸ்தகங்கள் அச்சிடப்பட்டன. பழைய தமிழ் இலக்கிய நூல்கள் அச்சிடப் படாமல் ஏட்டுச் சுவடிகளாகவே இருந்தன.

19-ஆம் நூற்றாண்டிலே 1835-ஆம் ஆண்டிலே நமது நாட்ட வரும் அச்சியந்திரசாலைகள் வைக்கலாம் என்னும் சட்டம் ஏற்பட்ட பிறகுதான் நம்மவர் அச்சியந்திரசாலைகளை நிறுவினார்கள். இதன் பிறகுதான் ஒலைச்சுவடிகளாக இருந்த பழைய தமிழ்நூல்கள் அச்சுப் புத்தகங்களாக வெளிவந்தன.

புத்தகம் அச்சிடுவது பற்றி இந்த ஆண்டில் அரசாங்கத்து அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.” 1835-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3 ஆம் நாள் ஆனரேபில் கவர்னர் செனரலவர்களாலே