பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

அரங்கேற்றினார். அந்நூலை ஞானாதிக்க நாயகர் அச்சிற் பதிப்பித்தார். அந்நூலுக்குச் சாற்றுகவி நல்கிய திருத்தணிகை விசாகப் பெருமாளையர் அவர்கள், அச்செழுத்தை எழுதா எழுத்து என்று கூறினார்.

"மருவார் தம்மைப் புறங்கண்டோன் மாரவேளின் எழில்கொண்டோன்.

மாண்பார் ஞானாதிக்கவியப்பேர் மகிபன் எழுதா வெழுத்ததனிற்

பெருகார் வத்திற் பொறித்தளித்தான் பிறங்கு நிலத்தில் வாழ்வோர்கள்

பேணி மகிழ்ச்சி யுளந்தன்னிற் பிறந்து களிப்பிற்

என்பது அவர் வாக்கு.

சிறந்துறவே

ஏட்டுச் சுவடிகளாயிருந்த தமிழ் நூல்களைச் சென்ற 19-ஆம் நூற்றாண்டில் முதன் முதலாக அச்சிற் பதிப்பித்த பதிப்பாசிரியர்கள் தாண்டவராய முதலியார், இராமச்சந்திர கவிராயர், முகவை இராமாநுச கவிராயர், கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர், திருத்தணிகை விசாகப் பெருமாளையர், களத்தூர் வேதகிரி முதலியார், ஆறுமுக நாவலர், மகாவித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளை, தில்லை யம்பூர் சந்திரசேகரக் கவிராச பண்டிதர், வீராசாமி செட்டியார், ராவ் பகதூர் சி.வை. தாமோதரம்பிள்ளை, டாக்டர் உ.வே. சாமிநாதஐயர் முதலியவர்கள்.

ஏட்டுச் சுவடியாக இருந்த பழந்தமிழ் நூல்கள் சென்ற நூற்றாண்டில் முதன் முதலாக அச்சிற் பதிப்பிக்கப்பட்டன என்பது உண்மை. ஆனால், எந்தெந்த நூல்கள் யார் யாரால் முதன்முதல் அச்சிடப்பட்டன என்பதற்கு முறையாக எழுதப்பட்ட குறிப்புகளோ வரலாறுகளோ கிடையாது சென்ற நூற்றாண்டில் முதன் முதல் அச்சிடப்பட்ட பிரதிகள் பெரும்பாலும் இப்போது மறைந்து விட்டன. இதனை தெளிந்து கண்டுபிப்பதே ஓர் ஆராய்ச்சியாகும். முதன் முதல் அச்சியந்திரம் வந்த 16-ஆம் நூற்றாண்டிலேயே ஏட்டுச் சுவடிகள் அச்சிடப்பட்டிருக்குமானால், பல நூல்கள் மறைந்து இருக்கமாட்டா. 16- ஆம் நூற்றாண்டுக்கும் 19-ஆம் நூற்றாண்டுக்கும் இடையே பல ஏட்டுச் சுவடிகள் மறைந்து போயின. தகடூர் யாத்திரை, தத்தாத்திரேயப்