பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

தானமாக வழங்குவது ஆகும். நூல்களை ஏட்டுச் சுவடிகளாகப் படி எழுதுவிப்பது அதிகப் பொருட்செலவுள்ள காரியம். ஏட்டுச் சுவடி எழுதி முடிப்பதற்கு பல நாட்கள் செல்லும். அவர்களுக்குத் தக்க ஊதியந்தரவேண்டும். இதிலிருந்து ஏட்டுச் சுவடிகள் எழுதிவைப்பதன்

அருமை உணரலாம்.

18,19-ஆம் நூற்றாண்டுகளிலே சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, சூளாமணி, பெருங்கதை முதலிய நூல்களைப் படிக்கக் கூடாது என்னும் கொள்கை (சைவ வைணவர்களிடம்) பரவியிருந்தது. காரணம் இவை சமண பௌத்த சமய நூல்கள் என்பது, சமயக் காழ்ப்புக்கு இடமில்லாத எட்டுத் தொகை, பத்துப்பாட்டு முதலிய நூல்களையும் படித்தல் கூடாது என்னும் கொள்கையும் சென்ற நூற்றாண்டில் இந்துக்களிடையே (சைவ வைணவர்களுக்குள்ளே) இருந்து வந்தது. இதனாலே, இந்த நூல்கள் மறைந்துபோகும் நிலைமையும் ஏற்பட்டிருந்தது. நற்காலமாக, சேலம் இராமசாமி முதலியாரின் வற்புறுத்தலினாலும் தூண்டுதலினாலும் உ.வே. சாமிநாதையர் அவர்கள் இந்நூல்களில் சிலவற்றை அச்சிற் பதிப்பித்து வெளியிட்டார். இதுபற்றி முன்னமே இந்நூலில் மற்றோரிடத்தில் விரிவாகக் கூறியுள்ளேன்.

ஏட்டுச் சுவடிகளில் காற்புள்ளி, அரைப்புள்ளி முற்றுப் புள்ளி, வினாக் குறி முதலிய குறியீடுகள் கிடையா. அச்செழுத்து வந்த காலத்தில் இக் குறிகள் மேல் நாட்டிலிருந்து பெறப்பட்டன. நிட்டானு பூதி என்னும் நூலுக்கு முத்துக் கிருஷ்ண பிரம்மம் என்பவர் உரை எழுதினார். இவ்வுரை 1875-இல் சென்னை பூமகள் விலாச அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது. அந்நூலில் அச்சுக் குறியீடுகளைப் பற்றி “இந்நூலுரையிலே காட்டப்பட்ட குறிகள்" என்னும் தலைப்பில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது.

இம்முளை கூட்டுச் சொல் முதலியவற்றின் பின்னும், - இச்சிறு கீற்றுச் சொற்களின் பிரிவுக்குப் பின்னும், இப்பொருங் கீற்றுப் பாதசாரத்துக்குப் பின்னும், ( ) இவ்விருதலைப் பிறை வருவிக்கப்பட்ட சொற்களுக்கும், இக்குத்து முற்றுச் சொல்லுக்குப் பின்னும், இவ்விருதலைப் பகரந் தாத்பரியத்துக்கும், இத்தாரகை அடியிற் காட்டப் பட்டவற்றிற்கும் வைக்கப்பட்டன.