பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏட்டுச்சுவடியும் அச்சுப் புத்தகமும்

தொன்றுதொட்டு நூல்கள் எல்லாம் பனை ஒலைகளில் எழுதப்பட்ட ஏட்டுச் சுவடிகளாக இருந்தன. ஏட்டுச் சுவடிகளாக இருந்த பழைய தமிழ் நூல்கள் முதல் முதலில் அச்சுப் புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டன. சென்ற பத்தொன்பதாவது நூற்றாண்டிலே தான். 19– ஆம் நூற்றாண்டுக்கு முன்பே 16, 17, 18-ஆம் நூற்றாண்டு களிலே அச்சு இயந்திரங்கள் நமது நாட்டில் வந்திருந்தபோதிலும், அந் நூற்றாண்டு களில் பழைய தமிழ் இலக்கிய நூல்கள் அச்சிடப்படாமல், கிறிஸ்துவ சமய நூல்கள் மட்டும் அச்சிற் பதிப்பிக்கப்பட்டன. அந்தக் காலத்தில் அச்சியந்திரங்கள் கிறிஸ்துவப் பாதிரிமாரிடத்திலும் போர்ச்சுகீசு, பிரான்சு, ஆங்கில ஆட்சியாளரிடத்திலும் இருந்தன: நம் நாட்டவர் கையில் அச்சு இயந்திரங்கள் அக் காலத்தில் இல்லை. ஆகவே, அந்த நூற்றாண்டுகளில் பழைய தமிழ் நூல்கள் அச்சிற் பதிப்பிக்கப்பட வில்லை, 19-ஆம் நூற்றாண்டிலே, கி.பி. 1835-ஆம் ஆண்டில் சுதேசிகள் அச்சியந்திரம் வைக்கக் கூடாது என்னும் தடை நீக்கப்பட்டு, இந்நாட்டினரும் அச்சியந்திரம் வைக்கலாம் என்னும் உரிமை கிடைத்த பிறகு, நம்மவரும் அச்சியந்திரம் நிறுவி, ஏட்டுச் சுவடிகளாக இருந்த பழைய நூல்களையும் புதிய நூல்களையும் அச்சிற் பதிப்பிக்கத் தொடங்கினார்கள்.

அச்சியந்திரங்களை இந்துக்கள் வைத்த உடனே எல்லா ஏட்டுச் சுவடிகளும் திடீரென்று அச்சுப் புத்தகங்களாக வெளிவந்துவிட வில்லை. ஏட்டுச் சுவடிகளும் திடீரென்று மறைந்துவிடவில்லை. 19- ஆம் நூற்றாண்டிலே அச்சுப் புத்தகங்களும் ஒருபுறம் வெளிவந்து ம் கொண்டிருந்தன. அதே சமயத்தில் ஏடும் ஏழுத்தாணியும் இருந்து வந்தன. பிறகு, மெல்ல மெல்ல, இரண்டு மூன்று தலைமுறை களுக்குப் பிறகு, ஏட்டுச் சுவடிகள் எழுதும் பழக்கம் மறைந்துபோய், அச்சுப் புத்தகங்கள் நிலைபெற்றுவிட்டன. இப்போது, ஏடும் எழுத்தாணியும் காட்சி சாலையில் காட்சிப் பொருள்களாக இடம் பெற்று விட்டன.