பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

19-ஆம் நூற்றாண்டிலே பழைய ஏட்டுச் சுவடிகள் அச்சுப் புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டமையாலே பல தமிழ் நூல்கள் அழிந்து போகாமல் உயிர் பெற்றுள்ளன. சுதேசிகள் தம் நூல்களை அச்சிடுவதற்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தாமதப்பட்டிருக்கு மானால், இப்போது கிடைத்துள்ள பழைய நூல்களிலே பல நூல்கள் மறைந்து போயிருக்கும் என்பதில் சற்றும் ஐயம் இல்லை. ஏனென்றால், ஒரு நூலின் ஏட்டுப் பிரதிகள் தமிழ்நாடு முழுவதிலும் மிகச் சில பிரதிகளே இருந்தன. அதிலும் உயர்தர இலக்கிய நூல்களின் பிரதிகள் மிகமிகச் சிலவே இருந்தன. அப்பிரதிகள் பழைமையாகி அழிந்துபோகும் நிலையில் இருக்கும்போது அவற்றை வேறு பிரதி எழுதி வைக்கா விட்டால், அவை முழுவதும் மறைந்து போகும். பிரதி எழுதி வைக்காத காரணத்தினால், மறைந்துபோன நூல்கள் பல. நமது நாட்டிலே 16, 17, 18-ஆம் நூற்றாண்டுகளிலே ஏற்பட்ட அரசியல் குழப்பத்தினாலும் கொந்தளிப்பினாலும் மக்கள் அமைதியில்லாமல் அல்லற்பட்டபோது, ஏட்டுச் சுவடியாக இருந்த பல அருமையான நூல்கள், பிரதி எழுதி வைக்கப்படாத காரணத்தினாலே முழுவதும் மறைந்து போயின. ஏட்டுப் பிரதிகள்

19-ஆம் நூற்றாண்டிலும் ஏட்டுப் பிரதிகளின் நிலைமை இரங்கத் தக்கதாக இருந்தது. 1887-ஆம் ஆண்டில் கலித்தொகையை முதன் முதலாக அச்சிட்ட சி.வை. தாமோரம் பிள்ளையவர்கள் இதுபற்றி எழுதியுள்ளதைப் படித்தால் இச்செய்தி நன்கு விளங்கும். நீருக்கும் நெருப்புக்கும் இரையான பழைய ஏட்டுச் சுவடிகள் போக, எஞ்சி யிருந்த ஏட்டுச் சுவடிகளின் நிலைமையைப் பத்தொன்பதாம் நூற்றாண் டில் இருந்த அவர் நன்கு விளக்கிக் கூறுகிறார். தாம் பதிப்பித்த கலித்தொகை நூலின் பதிப்புரையில் பிள்ளையவர்கள் இவ்வாறு எழுதுகிறார்:

66

"இவர்கள் கைக்குத் தப்பின சின்னூல்களே இந்நாளில் தமக்குப் பெரிய அரிய நூல்களாயின. அவையும் இக்காலத்து இன்னுந் தமக்கு என்ன பேரவதி வருமோவென்று பயந்தாற்போல இங்கும் அங்கும் ஒளிந்து கிடந்து படிப்பாரும் எழுதுவாரும் பரிபாலிப்பாரு மின்றிச்

66

'செய்துளைப் புள்ளியன்றி மெய்ப்புள்ளி விரவாத சென்னா ளேட்டிற்

பல்துளைத்து வண்டு மணலுழுத வரியெழுத்து”