பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

99

உடையவாய்ச் செல்லினால் அரிக்கப்பட்டும் பாணங்களாற்' றுளைக்கப்பெற்றும் மூன்றாவது பூதமான மண்ணின் வாய்ப் படுகின்றன.

66

وو

"என் சிறு பிராயத்தில் என் தந்தையார் எனக்குக் கற்பித்த சில நூல்கள் இப்போது தமிழ்நாடெங்கும் தேடியும் அகப்படவில்லை. ஒட்டித் தப்பியிருக்கும் புத்தகங்களும் கெட்டுச் சிதைந்து கிடக்கும் நிலைமையைத் தொட்டுப் பார்த்தவர்க்கன்றோ தெரியவரும்! ஏடு எடுக்கும்போது ஓரஞ் சொரிகிறது. கட்டு அவிழ்க்கும் போது இதழ் முரிகிறது, ஏட்டைப் புரட்டும்போது துண்டு துண்டாகப் பறக்கிறது. இனி எழுத்துக்களோ வென்றால் வாலுந் தலையுமின்றி நாலுபுறமும் பாணக்கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கின்றது.

இவ்வாறிருந்தது பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் ஏட்டுச் சுவடிகளின் இரங்கத்தக்க நிலை. சில நூல்களின் ஏட்டுச் சுவடிகள் கிடைப்பதும் அருமையாக இருந்தன. 18-ஆ நூற்றாண்டில் இருந்த வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் என்னும் நூல் 19-ஆம் நூற்றாண்டில் கிடைப்பது அரிதாயிற்று. இந்நூலை 1889-ஆம் ஆண்டு அச்சிற் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள் இந்நூல் பதிப்புரையில் எழுதுவது காண்க:-

66

இலக்கண விளக்கம்) அச்சின்வாய்த் தோற்றாமையாற் கற்போர்க்குத் கிடைத்தற்கரிதாகி அதனால் அடையற்பாலதாம் பயனை உலகம் பெறாமற் போகத்தக்கதாய் வந்துவிட்டது. இதனை உணர்ந்தே அடியேன் இப்பொழுது அதனை அச்சிட்டுப் பிரசுரஞ் செய்யத் தலைப்பட்டேன்.'

وو

“அச்சின்வாய்த் தோற்றாமலும் பரிபாலனம் அடையாமலும் இருக்கும் நூல்கள் எத்துணைச் சீக்கிரம் இறந்து விடுகின்றன என்ப தற்குச் சொற்ப காலத்துக்கு முன்னர் உதித்த நூலின் கடைசி இயல் களுக்குத் தமிழ் நாட்டிலே பிரதிகள் அகப்படாமையும், எங்கெங்குத் தேடியும் யாது முயற்சி செய்தும் பாட்டியலுக்கு இரண்டு பிரதிமாத்திரம் அகப்பட்டதும் சான்று பகரும். சில சில இடங்களில் அகப்பட்ட பொருளதிகாரப் பிரதிகள் அவிழ்த்துப் பார்ப்பதற்கும் உபயோக மில்லாத தசையடைந்துவிட்டன.

19-ஆம் நூற்றாண்டில் ஏட்டுச் சுவடிகளின் நிலைமை இவ்வாறு

இருந்தது.