பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 17

அனைநிக ரன்பு மியேசுவி னருளு

மவனியிற் பொறையும்விண் சுடரோன்

றனைநிக ரொளியு மலைநிகர் வலியுந்

தழைத்திட வாழ்ந்துநன் மொழியால் கனைகழல் வேந்தர் முதலினோர்க் கறிவு காட்டிநற் கதியினைச் சார்ந்தான் றினையள வைய மின்றிநற் கலைக

டேர்ந்த விரேனியூ சென்போன்.

இரேனியுஸ் ஐயர் தமிழ்மொழியில்

மிக்க

வல்லவர்.

அக்காலத்தில், ‘கவிராயர்” என்றும், 'மகாவித்துவான்' என்றும் சிறப்புப் பெயர்பெற்று விளங்கிய முகவை இராமானுசக் கவிராயரிடத்தில் இவர் தமிழ் கற்றார். கனம் ஜி.யூ. போப் ஐயர் அவர்களும் இரேனியுஸ் ஐயரைத் தமிழிற்றேர்ந்த அறிஞர் என்று புகழ்ந்தெழுதியிருக்கிறார்கள். இரேனியுஸ் ஐயர் பிழையற்ற தெளிவான தமிழ்நடையில் பல நூல்களை இயற்றியிருக்கிறார். இவர் இயற்றியன யாவும் உரைநடை நூல்களே. செய்யுளில் நூல் இயற்றியதாகத் தெரியவில்லை. தமிழிற் சொற்பொழிவு நிகழ்த்து வதில் நாவன்மையும், நூல் எழுதுவதிற் கைவண்மையும் பெற்றுத் திகழ்ந்த இப்பெரியாருடன் திருப்பாற்கடல் நாத கவிராயர் போன்ற பல தமிழ்ப் புலவர்கள் நட்புரிமை பூண்டிருந்தனர்.

இரேனியுஸ் ஐயர் எழுதிய உரைநடையின் மாதிரியைக் கீழே தருகிறோம். இப்பகுதி, அவர் எழுதிய வேத உதாரணத் திரட்டு என்னும் நூலின் 3-ஆம் அதிகாரத்திலுள்ளது.

66

'அவர்கள் (அப்போஸ்தலர்கள்) வஞ்சகர்களா யிராமற் களங்க மில்லாத உண்மையுஞ் சத்தியமுமுள்ளவர்களா யிருந்தார்களே. இது அவர்கள் எழுதின வகையினாலும் எப்படி விளங்குகிற தென்றால், அவர்கள் தாங்கள் எழுதினவைகளாலே யுலகத்திலே தங்களுக்குப் பேருண்டாக்கலாமென் றெண்ணி யெழுதாமற் சனங்களிடத்திலே தோன்றிய அருள்காரணத்தினாலே யேவப் பட்டு எழுதினார்கள். அந்தக் காரணங்கள் தோன்றாமலிருக்குமானால், அவர்கள் ஒரு சரித்திரத்தையும் ஒரு நிருபத்தையும் மெழுத மாட்டார்களென்று தோன்றுகிறது. சபைகள் பெருகின பொழுதுந் தூரமாயிருந்த யூதர்