பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-17

கொடுத்ததையும், அவர் மிகுந்த இகழ்ச்சிப் படத்தக்கதாக இரண்டு கள்ளரின் நடுவே சிலுவைமரத்தில் அறையப்பட்டதையும் விபரம யெழுதியிருக்கிறார்கள். வஞ்சகர் இப்படி எழுதுவார்களா? தங்களெசமானனுக்குக் கனவீனமானதை யெழுதாமல் அவரை மகிமைப்படுத்துகிறவைகளை மாத்திரம் மிகுந்த ஞாபகத்தோடே யெழுதுவார்களல்லவா? அப்போஸ்தலர்கள் அப்படிச் செய்யாமல், உலகத்தாருக்கு முன்பாகக் கனத்தையும் கனவீனத்தையும் நடந்த படியே யெழுதியபடியினாலே அவர்கள் நிசஸ்தரென்று நன்றாய் விளங்குகிறது. மேலும் இயேசு கிறிஸ்துவை மகிமைப் படுத்துகிற அற்புதங்களை அவர்கள் மற்றவர்களுடைய மனசையெழுப்பும் படிக்கு அந்தச் செய்திகளுக்கு முன்னாலாவது, பின்னாலாவது அவரைப் புகழ்கிற வசனங்களைச் சொல்லாமல் அந்தச் செய்தியை மாத்திரஞ் சொல்லியிருக்கிறார்கள். அவர் தம்முடைய சத்துருக்கள் பேசாமலிருக்கும்படி செய்து செயங்கொண்டதைச் சொல்லுகிற பொழுது, வெற்றிச் சிறப்பான வார்த்தைகளைக் கூட்டாமற் சொல்லி யிருக்கிறார்கள். தங்கள் சத்துருக்களுக்கும் அவர்கள் மிகுந்த உண்மையையுஞ் சாந்தத்தையுங் காண்பிக்கிறார்கள். கிறிஸ்துநாதரைத் துன்பப்படுத்திக் கொலை செய்தவர்களிற்; காய்பா, அன்னா, பிலாத்து, யூதா என்பவர்களை மாத்திரஞ் சொல்லியிருக்கிறார்கள். அவர்களைக் குறித்துச் சொல்லுகிற பொழுதும் அவர்களுக்கு இகழ்ச்சியான வார்த்தைகளைக் காட்டாமற் சரித்திரத்தை நிறைவாக்கும்படிக்கு மாத்திரம் அவர்களைக் குறித்துச் சொல்லியிருக்கிறார்கள்.

66

"அவர்கள் தங்களைக் குறித்துப் பேசுகிறபொழுதும் உண்மை தோன்றுகின்றது. எப்படியென்றால், தங்களுக்குண்டான கன வீனத்தை யவர்கள் மறையாமல் தாங்கள் தாழ்மையிற் பிறந்ததையும், உலகத்திலே யற்பமாயெண்ணப்படுகிற தொழில்களைச் செய்த தையுங் தாங்கள் அடைந்த தரித்திரத்தையுங் தாங்கள் மேன்மை யான போதகருக்குச் சீஷர்களாயிருந்தும் அவருடைய போதகத்தை மிகவுந் தாமதமாய் உணர்ந்துகொண்டதையும், விசுவாசத்திற் பலவீன மாயிருந்ததையுஞ், சிலர் இவ்வுலகத்தின்மேலே மிகுந்த ஆசை யுள்ளவர்களாயிருந்ததையும் சிலர் தாமதம், கோபம், பொறாமை முதலானவைகளைக் காட்டினதையும், எல்லாரும் இலவுகீக சிந்தை யுள்ளவர்களாயிருந்ததையும் தங்கள் போதகர் பிடிக்கப்பட்ட பொழுது