பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

கிறித்துவமும் தமிழும்

121

மொழிகளையும் கற்றவர். இவர் இயற்றிய நூல்களுள் சிறந்தது “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் இஃது ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. இதில் திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் முதலிய மொழிகள் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதையும், அவற்றிற்குள்ள ஒற்றுமைகளையும் விளக்கி எழுதியிருக்கிறார். திராவிட மொழிகள் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதை முதன்முதல் உலகத்தாருக்கு விளக்கிச் சொன்னவர் இவரே. "திருநெல்வேலிச் சரித்திரம் என்பது இவரால் ஆங்கிலத்தில்

எழுதப்பட்டது.

இவரியற்றிய தமிழ் நூல்கள் : நற்கருணைத் தியான மாலை, (1853) தாமரைத் தடாகம். (1871) இவையன்றி ஞான ஸ்நானம், நற்கருணை என்னும் பொருள் பற்றித் தமிழில் இரண்டு நீண்ட கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இக்கட்டுரைகள், என்ரி பவர் ஐயர் 1841-ல் எழுதி அச்சிட்ட "வேத அகராதி” என்னும் புத்தகத்திற் சேர்க்கப்பட்டிருக் கின்றன. இவர் சில துண்டுப் பிரசுரங்களையும் தமிழில் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

இவருடைய தமிழ் உரைநடையின் மாதிரியைக் கீழே தருகிறோம். இஃது இவர் இயற்றிய "நற்கருணைத் தியானமாலை என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது:

66

'கர்த்தருடைய இராப் போஜனத்தைச் சேர்ந்தவர்களும் அதற்கு ஆயத்தமாகிறவர்களும் தங்களைச் சோதித்தறிந்து செபத் தியானஞ் செய்து சேரவேண்டிய ஒழுங்கிருக்க, இத்தேசத்துக் கிறிஸ்தவர்களில் அநேகர் வேதவசனத்தை நன்றாய் அறியாதவர் களாயும், தேவ பக்தியில் தேறாதவர்களாயும் தியானம் பண்ணு கிறதில் வழக்கப் படாதவர்களாயும் இருப்பதினாலே, நற்கருணைக் கென்று ஆயத்தம் பண்ணிக்கொள்ளுஞ் சமயத்திலும் அதை வாங்குந் தருணத்திலும் வாசிக்கத்தக்க செபத்தியானங்களுள்ள புத்தகம் அவர்களுக்கு அவசியம் தேவையா யிருக்கின்றது. அப்படியிருந்தும் இதுவரையில் அப்படிப்பட்ட புத்தகம் இல்லாததால் அநேகர் ஏற்றபடி கர்த்தருடைய பக்தியில் சேர ஏதுவில்லாமல், தரிசு நிலத்தில் மழை பெய்தும் பயிர் விளையாததுபோல், ஆசீர்வாதமும் ஆறுதலும் அடையாமல் போனதுண்டு. இதைக் குறித்து நெடுக விசாரப்பட்டு இக்குறைவைத் தீர்க்க என்ன செய்யலாமென்று யோசித்து, நற்கருணைத் தியானப்