பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 17

புத்தகமொன்றைச் செய்யும்படி தீர்மானித்ததின்பேரில் ஐரோப்பாக் கண்டத்தில் உத்தமபக்தியும் ஞானமுமுள்ள குருமார் அக்கண்டத்துக் கிறிஸ்தவர்கள் பிரயோசனத்திற்காகச் செய்த நற்கருணை ஆயத்தப் புத்தகங்களைப் பரிசோதித்து அவற்றில் இத்தேசத்துச் சபையார் புத்திக்கும் தமிழ்மொழிக்கும் இசைந்தவைகளைத் தெரிந்தெடுத்து, கூட்டியும் குறைத்தும் இப்புத்தகத்தை உண்டாக்கி இருக்கிறேன்.

இச்செபத் தியானங்களை அவரவர் தனித்து வாசிக்கிறது மின்றி, கிறிஸ்தவர்கள் செபஞ் செய்யும்படி கூடிவரும் வேளைகளிலும் சில தியானங்களை வாசிக்கத்தகும்.

"தேவ நற்கருணை வாங்கும்போதெல்லாம் இப்புத்தகத்தில் அடங்கியிருக்கிற செபத்தியானங்கள் ஒவ்வொன்றையும் முறையாய் வாசிக்கவேண்டுமென்று நினைக்கவேண்டாம். ஒரு மாதத்தில் சில தியானங்களையும் அடுத்த மாதத்தில் மற்றுஞ் சில தியானங்களையும் வாசித்தால் எப்பொழுதும் எழுப்புதல் உண்டாக ஏதுவாக இருக்கும். இப்புத்தகம் உதவியே யன்றித் தடையல்ல; மாலையேயன்றி விலக்கல்ல. இயேசு இரட்சகரின் அன்பை நினைவுகூர்ந்து கொண்டாடுவதற்குக் கிறிஸ்துவர்கள் எப்பொழுதும் ஆயத்த மாயிருக்க வேண்டியதால், இப்படிப்பட்ட செபத் தியானங்களை வாசிக்கச் சமயம் கிடையா விட்டாலும் கர்த்தருடைய பந்தியில் சேராமல் இருக்கக்கூடாது.

66

இப்புத்தகத்திலுள்ள செபங்களையுந் தியானங்களையும் வாசிக்கிற ஆயத்தமே போதுமென்று ஒருவரும் நினைத்து மோசம் போகக்கூடாது. பாவத்தை உணர்தலும் கிறிஸ்துவை விசுவாசித்துப் பற்றிக்கொள்ளுதலும் அவர் அருளும் வரப்பிரசாதங்களை வாஞ்சித்தலுமாகிய ஆயத்தம் அவசியம் வேண்டும். இவ்வாயத்த மில்லாமல் எந்தத் தியானங்களை வாசித்தாலும் எவ்வகை எத்தனஞ் செய்து முயன்றாலும் பிரயோசனம் வராது. கர்த்தருடைய இராப் போசனம் ஆவிக்குரிய விருந்தாதலால் ஆவியோடும் உண்மை யோடும் சேருகிறவர்களே அதற்குப் பாத்திரவான்கள்.'

“இத்தேசத்துக் கிறிஸ்தவர்கள் இப்புத்தகத்தின் உதவியால் பக்திக்கேற்ற ஆயத்தத்தோடே தேவ நற்கருணையை வாங்கும்