பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

-

கிறித்துவமும் தமிழும்

125

அழகும் உடையதாம். இவர், பில்கிரிமிஸ் பிராக்ரஸ்' என்னும் நூலைத் தமிழில் எழுதிச் சென்னையில் அச்சிட்டார்.

கிளார்க் ஐயர்

(Rev. W. Clark)

இவர் தமிழில் சில நூல்களை எழுதியிருக்கிறார். தீர்க்க தரிசன வியாக்கியானம், போதகா ஒழுக்கம் என்னும் இவ்விரண்டு நூல்களையும் இவர் எழுதினார். இந்நூல்கள் 1865-இல் பாளையங் கோட்டையில் அச்சிடப்பட்டன.

ராட்லர் ஐயர் (1749-1836)

(Rev. J.P. Rottler, M.A.)

சமய

இவர் பிரான்ஸ் தேசத்தில் 1749-இல் பிறந்தவர். ஊழியராகத் தரங்கம்பாடிக்கு 1776-இல் வந்தார். பிறகு 1803-இல் சென்னைக்கு வந்து தேவ ஊழியம் செய்தார். அறுபது ஆண்டு இங்கு வாழ்ந்திருந்து, தமது எண்பத்தேழாம் வயதிலே 1836-இல் காலமானார். இவர் எழுதிய தமிழ் ஆங்கில அகராதி அக்காலத்தில் பேர் போனது.

உவின்ஸ்லோ ஐயர் (1789 - 1864

(Rev. Dr. Winslow)

யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் சமய ஊழியம் செய்திருந்தார். 1823 முதல் 1840 வரையில் பல துண்டுப் பிரசுரங் களையும் எழுதி வெளியிட்டார். இவர் எழுதிய உவின்ஸ்லோ அகராதி அக்காலத்தில் பேர் போனது.