பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 17

பாடல்களே இந்நூலின் சிறப்பை விளக்கும். “நறைவார் சோலைப் பிறையா றெனுநகர், வதிதரு சோழ வேளாள மரபிற், பதிதரு தாண்டவ ராயவேள் பயந்த நாட வருசுவி சேடசித் தாந்தி, செங்குவளை யந்தார் தங்குமணி மார்பன், நாம வேலைப் புவி நயக்கும், சாமுவே லெனுந் தகைமை யோனே" என்று புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியாரவர்கள் சொல்லியிருப்பதிலிருந்து இவரது ஊர் முதலியன நன்கு விளங்கும். சாமுவேல் பிள்ளையவர்கள் தமிழ் மொழியில் பல நூல்களை இயற்றியிருக்கிறார்கள். விரிக்கிற் பெருகுமென்றஞ்சி எழுதினோமில்லை.

தமிழ்ப் புலமை வாய்ந்த நம் நாட்டுக் கிறித்துவர்களைப் பற்றி மிகச் சுருக்கமாக மேலே எழுதினோம். இவர்களையன்றி இன்னும் அநேகர் பண்டைக் காலத்திலிருந்தனர். சத்தியநாதன் ஐயர், ஞானமுத்து ஐயர், ஞானப்பிரகாசநாத சுவாமி, வேதமாணிக்கம் சந்தோஷம், தானியேல் ஐயர், ஜேக்கப் ஞான ஒளிவு ஐயர், ஞானப்பிரகாச சுவாமி, ஜகராவ் முதலியார் முதலியவர்கள் பண்டைக் காலத்திலிருந்த தமிழறிந்த நம் நாட்டுக் கிறித்தவர்களிற் சிலராவர். இவர்களைப் பற்றி எழுதப் புகுந்தால் நூல் பெரிதாகும் என அஞ்சி எழுதாமல் விடப்பட்டது.

நம்

வாய்ந்த நம் நாட்டுக்

இப்போதுள்ள தமிழ்ப்புலமை வாய்ந்த கிறித்துவர்களைப் பற்றியும் இங்கு எழுதப்படவில்லை.

1. J.R. Arnold

2. Morning Star

3. Rev. H. Bower

4. Bunyan's Holy War

5. Madras College

6. Manger

அடிக்குறிப்புகள்